(நெவில் அன்தனி)
சிட்டி புட்போல் லீக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற லீக் 1 கால்பந்தாட்டப் போட்டியில் ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்புடனும் சுறுசுறுப்புடனும் விளையாடிய குருநகர் (பாடும்மீன்) சிங்கிங் பிஷ் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மாளிகாவத்தை யூத் கழகத்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லீக் 1 (முன்னர் முதலாம் பிரிவு) கால்பந்தாட்டப் போட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் 7ஆவது நிமிடத்தில் மத்தியஸ்தரின் கவனக்குறைவால் சிங்கிங் பிஷ் கழகத்துக்கு வழங்கப்படவேண்டிய பெனல்டி ஒன்று கிடைக்காமல் போனது.
மாளிகாவத்தை பின்கள வீரர் ஒருவரின் கையில் பந்து படுவது தெளிவாக தெரிந்தபோதிலும் அதனை மத்தியஸ்தர் கண்டுகொள்ளவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் பெனல்டி வழங்குவதற்கு விசிலை வாய்க்கு அருகில் கொண்டு சென்ற மத்தியஸ்தர் திடீரென மனம் மாறி விசிலை ஊதாமல் விட்டுவிட்டார்.
போட்டியின் 43ஆவது நிமிடத்தில் மத்தியஸ்தர் மீண்டும் ஒரு தவறை இழைத்தார். அந்த தவறைப் பயன்படுத்திக்கொண்ட சிங்கிங் பிஷ் அணியினர் வின்ஸ்டன் கீதன் மூலம் முதலாவது கோலைப் போட்டு முன்னிலை அடைந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் சிங்கிங் பிஷ் கழகத்திற்கு கிடைத்த ப்றீ கிக்கை அவ்வணி வீரர் ஒருவர் உதைத்த பின்னரே மத்தியஸ்தரின் விசில் ஓசை வெளிவந்தது. இதனால் மாளிகாவத்தை யூத் வீரர்கள் செய்வதறியாது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க அதனைப் பயன்படுத்தி வின்ஸ்டன் கீதன் பந்தை கோலினுள் புகுத்தினார்.
வேறு வழியின்றி மத்தியஸ்தர் அந்த கோலை அனுமதித்தார்.
இடைவேளையின் பின்னர் மத்தியஸ்தர் மிக நேர்த்தியாக தனது பணியை ஆற்றினார்.
போட்டியின் 72ஆவது நிமிடத்தில் சிங்கிங் பிஷ் வீரர் ஒருவர் கடும் உபாதைக்குள்ளானதால் அவ்வணி ஓரிரு நிமிடங்களுக்கு பத்து வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனை சாதகமாக்கிக்கொண்ட மாளிகாவத்தை யூத் கழகம் அடுத்த நிமிடத்தில் (73ஆவது நிமிடம்) கோல் நிலையை சமப்படுத்தியது. மொஹமத் சுஹெய்ப் பரிமாறிய பந்தை மொஹமத் சர்பான் கோலினுள் இலாவகமாக புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
இதனை அடுத்து போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியதுடன் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க மாளிகாவத்தை யூத் கடுமையாக முயற்சித்தது.
ஆனால், சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய சிங்கிங் பிஷ், 77ஆவது நிமிடத்தில் ஜோன் ரெக்ஸ் ரெக்ஸமன் மூலம் கோல் போட்டு 2 - 1 என முன்னிலை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து திறமையாக விளையாடிய சிங்கிங் பிஷ், 90ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் எமில்டன் ரெமிசியஸ் தனுஸ் மூலம் மேலும் ஒரு கோலைப் போட்டு 3 - 1 என வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM