மக்கள் மத்தியிலே எமது இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன - எதிர்க்கட்சி தலைவர் 

Published By: Vishnu

09 Mar, 2025 | 08:51 PM
image

ஐக்கிய மக்கள் சக்தி அனைவரையும் ஒன்றிணைத்த பயணத்தையே முன்னெடுத்து வருகிறது. ஏனைய கட்சிகளைப் போன்று கொழும்பில் உள்ள  நட்சத்திர ஹோட்டல்களுக்குள் தலைவர்கள் செய்து கொள்ளும் இணக்கப்பாடுகள் எம்மிடம் இல்லை. மக்கள் மத்தியிலே எமது இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு அரநாயக்க தேர்தல் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திரமடைந்து 76 ஆண்டுகளாக நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. இந்த செய்தி தவறானது என்பதை தரவு ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். நாட்டில் 1950-1955 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆயுட்காலம் சராசரியாக 54.5 ஆண்டுகளாக காணப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் 76.6 ஆண்டுகள் ஆகும். 54 முதல் 76 வயது வரையிலான ஆயுட்கால அதிகரிப்பு இவர்கள் கூறும் இந்த சாபத்தால் தான் ஏற்பட்டதா ?  என கேள்வி எழுப்புகிறேன்.

 நீண்ட காலம் வாழ்வது 76 ஆண்டுகளின் சாபமா என்று கேள்வி எழுப்புகிறேன். 1945-47 இல் ஒரு ஆண் 46.8 வருடங்களும் ஒரு பெண் 44.7 வருடங்களும் என்றவாறு ஆயுட்காலம் காணப்பட்டன. 2021 ஆம் ஆண்டளவில் ஒரு ஆண் 72.9 வருடங்களும், ஒரு பெண் 80.1 வருடங்களும் சராரியாக உயிர் வாழ்ந்து வருகின்றனர். திசைகாட்டி தரப்பினர் இந்த விடயங்களை பொய்யாக அரசியல் கதையாகவே பிரஸ்தாபித்து வந்தனர். உண்மையான தரவுகளின் அடிப்படையில் சாபம் என்பதை இவர்கள் பிரஸ்தாபித்து வரவில்லை. வெறுமனே அரசியல் கதையாகவே இதனை தெரிவித்து வந்தனர்.

குழந்தை இறப்பு விகிதத்தைப் பார்க்கும்போதும், 1950-1955 காலகட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1000 பிறப்புகளுக்கு 103.9 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 2015-2020 ஆகும் போது இது 6.5 ஆகக் குறைந்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தளவு குறைந்து காணப்படுகின்றமை சாபமா என்று கேள்வி எழுப்பப்புகிறேன். எனவே மக்கள் இது உண்மையா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். எந்த ஒன்றையும் சும்மா கூறிவிட முடியாது. திசைகாட்டி கூறும் சபாக் கதையின் உண்மையை மக்கள் விமர்சன ரீதியாக ஒப்புநோக்கி யதார்த்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய் இறப்பு விகிதத்தைப் பார்த்தால், 1930 களில் 100,000 பிறப்புகளுக்கு 2,000 தாய்மார்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 1950-1960 இல், 100,000 பிறப்புகளுக்கு 500 முதல் 600 தாய்வழி இறப்புகள் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில், 100,000 பிறப்புகளுக்கு 29 தாய்வழி இறப்புகள் பதிவாகியுள்ளன. 76 ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள அளப்பரிய முன்னேற்றத்தை இந்தத் தரவுகள் மூலம் அறியலாம்.

நாம் அடைந்த முன்னேற்றத்தில் திருப்தி அடையாமல், மேலும் விரைவான வளர்ச்சியின் மூலம் விரைவான சௌபாக்கியத்தை எட்ட வேண்டும். தாய் இறப்பு, குழந்தை இறப்பு அதிகரித்து, ஆயுட்காலம் குறைந்தால் 76 ஆண்டுகளின் சாபக்கேடு என கூறிவதில் நியாயம் காணலாம், ஆனால் திசைகாட்டியினர் வாய்க்கு வந்தவாறு சபாம் என பொய்களை கூறி வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் மின்சார கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் கற்பனைக் கதைகளை கூறினார். கமிசன் மற்றும் தேவையற்ற வரிகள் காரணமாகவே எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்த பின்னர் பாரிய தொகை வித்தியாசத்தில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் எனவும் வீராப்பாக தெரிவித்தார். ஆனால் இந்த ஒன்றும் இன்னும் குறைக்கப்படவில்லை.

மின்கட்டணமும் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும் என்றார். ஆனால் அதுவும் இதுவரை நடக்கவில்லை. எரிபோருள் விலை சூத்திரத்தை நீக்கி மக்களுக்கு சாதகமான சூத்திரத்தை கொண்டு வருவோம் என்று பிரஸ்தாபித்தனர். இதுவரை புதிய சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவில்லை. ஏலவே காணப்பட்ட சூத்திரத்தையே இவர்களும் பின்பற்றி வருகின்றனர். விலைசூத்திர விடயத்திலும் திசைகாட்டியினர் அரசியல் பேச்சுக்களையே தெரிவித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

அனைவரையும் ஒன்றிணைத்த பயணத்தையே ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகிறது. ஏனைய கட்சிகளைப் போன்று கொழும்பில் உள்ள 7 நட்சத்திர ஹோட்டல்களுக்குள் தலைவர்கள் செய்து கொள்ளும் இணக்கப்பாடுகள் எம்மிடம் இல்லை. மக்கள் மத்தியிலே எமது இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. வட்டாரங்களுக்கு நாம் சிறந்த வேட்பாளர்களை முன்னிறுத்துவோம். கட்சி பேதமின்றி சகலராலும் நேசிக்கப்படும், மதிக்கப்படும் நபரை ஐக்கிய மக்கள் சக்தி முன்னிறுத்தும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52