வல்லப்பட்டைகளை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று பிற்பகல் 6.45 மணியளவில் அபுதாபி நோக்கி புறப்பட இருந்த இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான UL207 விமானத்தில் செல்லவந்த நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய நபர் அவருடைய பயணப் பொதியில் 23 கிலோ 400 கிராம் வல்லைப்பட்டை மறைத்து கடத்திச் செல்ல முயன்றவேளை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவற்றின் பெறுமதி 93 லட்சத்து 60 ஆயிரம் ரூபா ஆகும்.மேலும் குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.