எம்மில் பலரும் நல்ல வேலை , போதுமான சம்பளம் , அழகான குடும்பம் அமைந்தாலும் சந்தோஷமும், நிம்மதியும் இல்லாதிருக்கும்.
இவர்கள் தொடர்ந்து உற்சாகமாக வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்றால்... மனதில் நிம்மதி பிறக்க வேண்டும். அமைதி ஏற்பட வேண்டும்.
இதற்கு அவர்கள் நாளாந்தம் இரண்டு மணி தியாலமாவது ஆழ் நிலை உறக்கத்திற்கு செல்ல வேண்டும். இத்தகைய குறைபாட்டுடன் இருப்பவர்களுக்கு நடைமுறையில் உறக்கம் ஆரோக்கியமானதாக இருக்காது.
இவர்கள் உறக்கத்தை சீர்படுத்தி கொள்ளவும்.. அதனூடாக மனதில் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவும் நிம்மதியை உண்டாக்கிக் கொள்ளவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான வழிமுறையை கற்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது ஓரளவிற்கு அவர்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் வீணை எனும் இசை கருவியை வாங்கி வீட்டில் பூஜை அறையில் வைத்து இருக்க வேண்டும்.
வீணை என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் மகாலட்சுமி வாசம் செய்யும் வீட்டில் செல்வ வளம் பெருகி, அதனால் நிம்மதி- மன அமைதி கிடைக்கும். அதே தருணத்தில் வீடு முழுவதும் குறிப்பிட்ட தருணத்திற்கு புல்லாங்குழல் இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும்.
புல்லாங்குழல் இசையில் திரைப்பட பாடல்கள் அல்லது பக்தி பாடல்கள் அல்லது தியானத்திற்குரிய இசை கோர்வையை ஒலிக்கச் செய்யலாம்.
புல்லாங்குழல் எனும் இசை கருவியிலிருந்து வெளியாகும் ஓசைகள்..நாத் ஒலி- பிரபஞ்சத்துடன் இணைந்து நல்ல நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்தி , அதற்றை வீடு முழுவதும் பரவ செய்து மனத்தை அமைதிப்படுத்துகிறது.
இதனால் மனம் அமைதி அடைகிறது. மனம் அமைதி அடைவதால்.. உடலும் உள்ளமும் உற்சாகமடைகிறது. இது மனித வளத்தை மேம்படுத்தி, இலக்கை அடைய செய்கிறது.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM