யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

09 Mar, 2025 | 09:49 AM
image

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டினை செய்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற போது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருந்தார்.

இருப்பினும், கொடுத்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

இவ்வாறான, பின்னணியில் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இந்த விடயமானது நேற்று மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாகியது.

இவ்வாறான, பின்னணியில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முல்லை தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“பணவீக்கம் உயரும் நிலையில் அதிகரித்த மஹபொல...

2026-07-23 05:14:49
news-image

ஜி.எஸ்.பி.+ உட்பட அனைத்து சலுகைகளையும் நிறுத்துங்கள்...

2026-07-23 05:09:09
news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40