(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த முதல் தர கழகங்களுக்கு இடையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேஜர் லீக் 3 - நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் க்ளப் சம்பியனானது.
நடுநிலையான எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சனிக்கிழமை நிறைவுபெற்ற 4 நாள் இறுதிப் போட்டியில் நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கிரிக்கெட் க்ளப்பை (என.;சி.சி.) முதல் இன்னிங்ஸில் வெற்றிகொண்டதன் மூலம் புளூம்பீல்ட் சம்பியன் கிண்ணத்தையும் 35 இலட்சம் ரூபா பணப்பரிசையும் சுவீகரித்தது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற என்.சி.சி. க்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்தது.
லீக் சுற்றுப் போட்டிகள் 3 நாட்களாக நடத்தப்பட்ட போதிலும் இறுதிப் போட்டி 4 நாட்களைக் கொண்டதாக இருந்தது.
கடந்த புதன்கிழமை (05) ஆரம்பமான இப் போட்டியில் முதல் இரண்டு நாட்களும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய புளூம்பீல்ட் கழகம் 1ஆவது இன்னனிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 508 ஓட்டங்களைக் குவித்தது.
ரொன் சந்த்ரகுப்தா 493 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 237 ஓட்டங்களைக் குவித்தார்.
அவரைவிட அசித்த வன்னிநாயக்க 96 ஓட்டங்களையும் லஹிரு மதுஷன்க 55 ஓட்டங்களையும் ஹசித்த போயகொட 52 ஓட்டங்களையும் அணித் தலைவர் நிப்புன் கருணாநாயக்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லஹிரு குமார 87 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் அஷேன் டெனியல் 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மூன்றாம் நாளன்று பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கிரிக்கெட் க்ளப் அன்றைய தினம் சகல விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றது.
லஹிரு உதார திறமையாகத் துடுப்பெடுத்தாடி 145 ஓட்டங்களையும் காமில் மிஷார 40 ஓட்டங்களையும் கவின் பண்டார 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிந்து பெர்னாண்டோ 84 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றிருந்த புளூம்பீல்ட் கழகம், கடைசி நாளான நான்காம் நாளன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அசித்த வன்னிநாயக்க ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களையும் நிப்புன் கருணாநாயக்க ஆட்டம் இழக்காமல் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஷேன் டெனியல் 42 ஓட்டங்களையும் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டி முடிவில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சமன்த தொடன்வெல அதிதியாகக் கலந்துகொண்டு பரிசிகளை வழங்கினார்.
விசேட விருதுகள்
சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்: சஹான் கோசல (கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா - கண்டி கஸ்டம்ஸ் கழகம்)
சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்: திலும் சுதீர (கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா - பொலிஸ்)
இறதி ஆட்டநாயகன்: ரொன் சந்த்ரகுப்தா (கிண்ணத்துடன் 750,000 ரூபா - புளூம்பீல்ட்)
தொடர்நாயகன்: ரவிந்து பெர்னாண்டோ (கிண்ணத்துடன் 15 இலட்சம் ரூபா - புளூம்பீல்ட்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM