(நெவில் அன்தனி)
ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுளள இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன.
முன்னாள் சம்பியன்களான இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாக தென்படுவதால் இறுதிப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை இரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் 25 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
கென்யாவின் நைரோபியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்களால் வெற்றிபெற்று சம்பியனானது.
ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தில் இந்தியா தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றது.
இந்த வருட லீக் சுற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழiமை (02) இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூஸிலாந்து காத்திருக்கிறது.
அதேவேளை, 25 வருடங்களுக்கு முன்னர் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடிகொடுத்து 3ஆவது முறையாக சம்பியனாவதற்கு முயற்சிக்கவுள்ளது.
இந்த வருட சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் இரண்டு அணிகளும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திவந்துள்ளதால் மிகவும் பரபரப்பான ஓர் இறுதிப் போட்டியை எதிர்பார்க்கலாம்.
சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா தொடர்ச்சியான 3ஆவது தடவையாகவும் மொத்தமாக 5ஆவது தடவையாகவும் விளையாடவுள்ளதுடன் நியூஸிலாந்து 25 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டிருந்தது.
அப் போட்டியில் விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
அதேவேளை, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ரச்சின் ரவிந்த்ரா. கேன் வில்லியம்சன் ஆகியோர் சதங்கள் குவித்து அசத்தி இருந்தனர்.
அப் போட்டியில் தென் ஆபிரிக்கா சார்பாக டேவிட் மில்லர் தனி ஒருவராகப் போராடி குவித்த சதம் வீண்போனதுடன், நியூஸிலாது 50 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா, நியூஸிலாந்து ஆகிய இரண்டு அணிகளினதும் துடுப்பாட்டங்கள், பந்துவீச்சுகள் அற்புதமாக இருப்பதுடன் அந்தத் துறைகளில் இரண்டு அணிகளும் சமமாக இருக்கின்றன. ஆனால், களத்தடுப்பில் நியூஸிலாந்து வீரர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கடினமான பிடிகளை எடுத்து இந்திய வீரர்களை விட திறமைசாளிகள் என்பதை நிரூபித்துள்ளனர்.
இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத்தில் மொத்தமாக 14 சதங்கள் குவிக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பாக இருவரும் நியூஸிலாந்து சார்பாக நால்வரும் இணைந்து 7 சதங்களைக் குவித்து தமது துடுப்பாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஷுப்மான் கில், விராத் கோஹ்லி ஆகியோர் இந்தியா சார்பாகவும் வில் யங், ரச்சின் ரவிந்த்ரா (2), டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகியோர் நியூஸிலாந்து சார்பாகவும் சதங்கள் குவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் பிரதான கிரிக்கெட் சம்பியன்ஷிப்பின் நொக் அவுட் போட்டிகளில் இந்தியாவை விட நியூஸிலாந்து முன்னிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.
இந்த இரண்டு அணிகளும் ஐசிசி கிரிக்கெட்டில் சந்தித்துக்கொண்ட நான்கு நொக் அவுட் போட்டிகளில் நியூஸிலாந்து 3 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
2000ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி, 2021இல் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றில் நியூஸிலாந்து வெற்றிவாகை சூடியிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை இந்தியா வெற்றிகொண்டிருந்தது.
இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா,ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோரும் பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி, சருண் சக்ரவர்த்தி, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் பிரகாசித்துள்ளனர். அவர்களும் ஏனைய வீரர்களும் இறுதிப் போட்டியில் தமது அணியின் வெற்றிக்காக முயற்சிக்கவுள்னர்.
நியூஸிலாந்து சார்பாக ரச்சின் ரவீந்த்ரா, டொம் லெதம், கேன் வில்லியம்சன், வில் யங், க்லென் பிலிப்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சில் மெட் ஹென்றி, மிச்செல் சென்ட்னர், மைக்கல் ப்றேஸ்வெல், வில்லி ஓ'றூக் ஆகியோர் பந்துவீச்சிலும் அதிகப்பட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு சவாலாக விளங்குவர் என கருதப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, துபாய் சர்வதேச விளையாட்டரங்க ஆடுகளம் போட்டியின்போது நேரஞ்செல்ல செல்ல சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பும் என்பதாலும் இரவு வேளையில் மைதானத்தில் பனித்துளிகள் படியும் என்பதாலும் இரண்டு அணிகளும் முதலில் துடுப்பெடுத்தாடுவதையே விரும்பும். ஆகையால் இந்தப் போட்டியில் நாணய சுழற்சி தீர்மானம் மிக்கதாக அமையும் என்பது உறுதி.
இந் நிலையில், 25 வருடங்கள் கழித்து சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் மோதும் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்துவதற்காக கடும் பிரயாசையுடன் விளையாடும் என்பது நிச்சயம்.
அணிகள்
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சார் பட்டேல், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா. ரவிந்த்ர ஜடேஜா, மொஹம்மத் ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
நியூஸிலாந்து: வில் யங், ரச்சின் ரவிந்த்ரா, கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், டொம் லெதம், க்லென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மெட் ஹென்றி, நேதன் ஸ்மித், வில் ஓ'ப்றூக்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM