(நெவில் அன்தனி)
எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (08) முடிவடைந்த 146ஆவது நீலவர்ணங்களின் சமரில் றோயல் கல்லூரியினால் விடுக்கப்பட்ட சவாலை முறியடித்த சென். தோமஸ் 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் நீலவர்ணங்களின் சமர் 36 - 36 என சமநிலை அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் றோயல் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 233 ஓட்டங்கள் என்ற சவால் மிக்க வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். தோமஸ் ஒரு ஓவர் மீதம் இருக்க 5 விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
சதேவ் சொஸ்ஸா, தினேத் குணவர்தன, டேரியன் டியகோ ஆகிய மூவர் குவித்த அதிரடி அரைச் சதங்கள், றோயல் அணியின் சவாலை முறியடிக்க உதவின.
போட்டியின் முதலாம் நாளான வியாழக்கிழமை (06) ரெஹான் பீரிஸ் குவித்த 158 ஓட்டங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் றோயல் அணி 7 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி தனது முதல் இன்னிங்ஸில் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த சென் தோமஸ் அணி, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (07) முழு நாளும் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாம் நாளன்று தினேத் குணவர்தன குவித்த 119 ஓட்டங்களும் அவினாஸ் பெர்னாண்டோ பெற்ற 50 ஓட்டங்களும் சென். தோமஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தன.
போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் இரண்டு அணிகளும் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிரடியில் இறங்கி ஓட்டங்களைக் குவித்தன.
றோயல் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 51 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அணித் தலைவர் ரமிரு பெரேரா துணிச்சலை வரவழைத்து துடுப்பாட்டத்தை டிக்ளயார் செய்தார்.
ரெஹான் பீரிஸ், ரமிரு பெரேரா ஆகிய இருவரும அரை சதங்கள் குவித்து றோயல் அணியை நல்ல நிலையில் இட்டனர்.
42 ஓவர்களில் 233 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கை நோக்கி சென். தோமஸ் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்றே கருதப்பட்டது.
ஆனால், மூன்று வீரர்கள் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து சென். தோமஸ் அணிக்கு அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
சதேவ் சொய்ஸா 32 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் தினேத் குணவர்தன 47 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டறியுடன் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் ரெஷோன் சொலமன்ஸ் 48 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட ஜேடன் அமரவீர 48 ஓட்டங்களையும் மிதில சார்ள்ஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனிடையே மிதில சார்ள்ஸீமனட 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் சதேவ் சொய்ஸாவுடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் ஜேடன் அமரவீர பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.
எண்ணிக்கை சுருக்கம்
றோயல் 1ஆவது இன்: 319 - 7 விக். டிக்ளயார்ட் (ரெஹான் பீரிஸ் 158, தெவிந்து வேவல்வல 49, யசிந்து திசாநாயக்க 25 ஆ.இ., வி. தின்சார 25, டேரியன் டியகோ 43 - 2 விக்., கவிந்து டயஸ் 71 - 2 விக்.)
சென். தோமஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 302 (தினேத் குணவர்தன 119, அவினாஷ் பெர்னாண்டோ 50, கவிந்து டயஸ் 37 ஆ.இ., ஜேடன் அமரவீர 31, ரமிரு பெரேரா 58 - 5 விக்., ரனுக்க மலவிஆராச்சி 72 - 3 விக்.,)
றோயல் 2ஆவது இன்: 215 - 8 விக். டிக்ளாயார்ட் (ரெஹான் பீரிஸ் 53, ரமிரு பெரேரா 50, ஹிருண் லியனஆராச்சி 37, விமத் தின்சார 35, டேரியன் டியகோ 40 - 5 விக்., தினேத் குணவர்தன 51 - 2 விக்.)
சென். தோமஸ் (வெற்றி இலக்கு 233 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 233 - 5 விக். (சதேவ் சொய்ஸா 52, தினேத் குணவர்தன 50 ஆ.இ., ரெஷோன் சொலமன்ஸ் 50 ஆ.இ., ஜேடன் அமரவீர 48, ரமிரு பெரேரா 79 - 3 விக்., ரனுக்க மலவிஆராச்சி 62 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM