52 வருடங்களின் பின் சென். பற்றிக்ஸை வீழ்த்தி பொன் அணிகளின் போரில் வெற்றியை சுவைத்தது யாழ்ப்பாணக் கல்லூரி

08 Mar, 2025 | 06:59 PM
image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான பொன் அணிகளின் போரில் 52 வருடங்களின் பின்னர் சென் பற்றிக்ஸ் கல்லூரியை முதல் தடவையாக வீழ்த்தி யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றியை சுவைத்தது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை நிறைவடைந்த 108ஆவது போன் அணிகளின் போரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை 59 ஓட்டங்களால் யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெற்றிகொண்டது.

அணித் தலைவர் சிதம்பரலிங்கம் மதுசன் முழுப் போட்டியிலும் 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் சுரேஷ் கோபிஷனுடன் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 71 ஓட்டங்களைப் பகிர்ந்து தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இப் போட்டியில் மதுசன் 68 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தியிருந்தார்.

முதல் ஒன்றரை நாட்களில் இப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டபோதிலும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் சென் பற்றிக்ஸின் கை மேலோங்கி இருந்தது.

இதன் காரணமாக சென் பற்றிக்ஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டியின் கடைசி நாளான இன்று சனிக்கிழமை காலை 5 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்த யாழ்ப்பாணக் கல்லூரி 159 ஓட்டங்களைப் பெற்று சற்று பலமான நிலையை அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தபோது 6ஆவது விக்கெட் வீழ்ந்ததால் சென். பற்றிக்ஸ் அணியினர் பெரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

ஆனால், சிதம்பரலிங்கம் மதுசனும் சுரேஷ் கோபிஷனும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 71 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

120 பந்துகளை எதிர்கொண்ட மதுசன் 32 ஓட்டங்களையும் 84 பந்துகளை எதிர்கொண்ட கோபிஷன் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குமணதாசன் சாருஷன் 4 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

146 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 35.3 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பற்குணம் மதுஷன் தனித்து போராடி 73 பந்துகளை எதிர்கொண்டு 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக 14 உதிரிகள் சென். பற்றிக்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

பந்துவீச்சில் சிதம்பரலிங்கம் மதுசன் 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 16.3 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மதுசனுக்கு பக்கபலமாக பந்துவீசிய வாசுதேவன் விஷ்ணுகோபன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 153 (ரொபின்சன் ஜோன்சன் 61, வாசுதேவன் விஷ்னுகோபன் 30, விஜயகுமார் எவொன் 17 - 3 விக்., பிரேமநாயகம் மதுசன் 17 - 2 விக்., விமலதாஸ் பிரியங்கன் 21 - 2 விக்., குமணதாசன் சாருஷன் 42 - 2 விக்.)

சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 167 (உதிரிகள் 35, டேவிட் அபிலாஷ் 28, ஸ்டீவ் ஆதித்தியா 27, விமலதாஸ் பிரியங்கன் 23 ஆ.இ., பிரேமநாயகம் மதுசன் 20, சிதம்பரலிங்கம் மதுசன் 45 - 5 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 34 - 2 விக்., ஹமிஷ் ஹார்மிஷன் 43 - 2 விக்.),

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 159 (எஸ். கோபிஷன் 35, சிதம்பரலிங்கம் மதுசன் 32, குமணதாசன் சாருஷன் 45 - 4 விக்., பிரேமநாயகம் மதுசன் 35 - 3 விக்., பற்குணம் மதுஷன் 9 - 2 விக்.)

சென். பற்றிக்ஸ் (வெற்றி இலக்கு 146 ஓட்டங்கள்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 86 (பற்குணம் மதுஷன் 35, சிதம்பரலிங்கம் மதுசன் 23 - 6 விக்., வாசுதேவன் விஷ்னுகோபன் 43 - 3 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00