காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மனித குலத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்ற அம்சங்களை காட்சிப்படுத்தியது.
சுற்றாடல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, தேசிய நல்லிணக்கம் ஆகிய அம்சங்கள் இதன்போது முக்கியத்துவம் பெற்று காணப்பட்டன. பாடசாலையின் அதிபர் எஸ். இரகுநாதனின் சிந்தனையின் பொறுப்பாசிரியர்களின் வழிகாட்டலில் இவை இடம்பெற்றன.
பிரதம விருந்தினரான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் அடங்கலான பேராளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மாணவர்களின் விளையாட்டு திறமைகளோடு இவற்றையும் நயந்தார்கள்.
சுற்றாடலுக்கு நட்புறவான பொருட்களை பயன்படுத்தி அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே போல விநோத உடை போட்டியில் போதை பொருள் ஒழிப்பு, கையடக்க தொலைபேசியின் அதீத பாவனை ஏற்படுத்துகின்ற தீமைகள், தாய்மையின் பெருமை போன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
விநோத உடை போட்டியில் தாய் வேடம் பூண்டு வந்து தாய்மையின் பெருமை பற்றி உரையாற்றிய தரம் 04 மாணவி தர்மேந்திரா கவிநயா முதலிடத்தை பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM