(நெவில் அன்தனி)
முதலாம் நாளன்று றோயல் சார்பாக ரெஹான் பீரிஸ் சதம் குவித்ததைத் தொடர்ந்து இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (07) சென். தோமஸ் வீரர் தினேத் குணவர்தன சதம் குவித்து அசத்த, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் 146 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியற்ற முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.
முதலாம் நாளன்று றோயல் அணி தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். தோமஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (07) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சென். தோமஸ் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.
தினேத் குணவர்தன நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி குவித்த சதம் சென். தோமஸ் அணியை கௌரவமான நிலையில் இட்டது.
அவினாஷ் பெர்னாண்டோ, ஜேடன் அமரவீர ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஜேடன் அமரவீர 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபின்னர் மொத்த எண்ணிக்கை 92 ஒட்டங்களாக இருந்தபோது அவினாஷ் பெர்னாண்டோ 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சதேவ் சொய்ஸ 27 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் சிரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.
68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது.
ஆனால், தினேத் குணவர்தனவும் அணித் தலைவர் கவிந்து டயஸும 8ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
தினேத் குணவர்தன 164 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 119 ஓட்டங்களைப் பெற்றார்.
கவிந்து டயஸ் 111 நிமிடங்கள் தாக்குப் பிடித்து 100 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிளுடன் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் றோயல் அணித் தலைவர் ரமிரு பெரேரா 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரனுக்க மலவிஆராச்சி 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
றோயல் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
ரெஹான் பீரிஸ் 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 158 ஓட்டங்களைக் குவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM