ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண பரிகாரம்

07 Mar, 2025 | 05:56 PM
image

இன்றைய சூழலில் பிறக்கும் குழந்தைகளை இலத்திரனியல் சாதனங்களின் பாவனையிலிருந்து தற்காத்து வளர்ப்பது என்பது கடினமானது. 

சவால் மிக்கதும்கூட ஆனால் குழந்தையாக இருக்கும் போதே அவர்களுக்கு மகாபாரதம் எனும் இதிகாச கதைகளை சொல்லிக்கொண்டிருந்தாலும் வாசிக்க தூண்டினாலும் அல்லது வாசிப்பதை கேட்க வைத்தாலும் அதனை இணையம் மூலமாக அவர்கள் பார்வையிட்டாலும் பலன் உண்டு என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆரோக்கியம் சார்ந்த பலன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மகாபாரதத்தை பெற்றோர்கள் வாசிக்க பிள்ளைகள் கேட்டால்.. அந்தப் பிள்ளைகளுக்கு ஆயுள் முழுவதும் இதயம் தொடர்பாக எந்த பாதிப்பு ஏற்படாது என்று என்கிறார்கள். 

பிள்ளை பருவத்தில் அவர்களுக்கு மகாபாரதத்தை கற்பிக்கவில்லை என்றாலும் வேறு தருணங்களில் மகாபாரதத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால்.. அந்தத் தருணத்திலிருந்து அவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாது என்றும், அதையும் கடந்து வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாரிய பாதிப்பாக இல்லாமல், எளிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய பாதிப்பாகவே கடந்துவிடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய வல்லமை அதாவது இதயத்தை பாதுகாக்கும் வல்லமை மகாபாரதம் எனும் இதிகாசத்திற்கு இருப்பதாக ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மகாபாரதம் நீண்டது. நெடியது. பல கதாபாத்திரங்களை கொண்டது.  விவரிப்பதற்கும், விவரிப்பதை கேட்பதற்கும் பொறுமை இருதரப்பிலும் இருக்காது என எண்ணுபவர்கள்.. உங்களுடைய பிள்ளைகளுக்கு ராமாயணத்தை கற்பிக்கலாம். இந்த புராண இதிகாசத்தை வாசித்தாலும் அல்லது வாசிப்பதை கேட்டாலும் உங்களுக்கு குருதி அழுத்தம் தொடர்பான பாதிப்பு ஏற்படாது என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து 64 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தாலும் அல்லது வாசிக்க கேட்டாலும் உங்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவை பூரணமாக குணமாகிவிடும். புற்றுநோயாளிகள் 64 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கத் தொடங்கினால் உங்களுடைய புற்றுநோய் பாதிப்பிற்கு மேற்கொள்ளும் சிகிச்சை முழுமையாக பலனளித்து நிறைவான நிவாரணத்தை விரைவாக பெற இயலும். புற்றுநோயாளிகளின் புற்றுநோயின் தீவிரம் அதிகரித்தவர்கள் ...  இந்த 64 நாயன்மாரின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது அவர்களின் வாழ்நாள் அதிகரிப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35
news-image

கல்வியில் இருக்கும் தடையை அகற்றுவதற்கான சூட்சும...

2025-03-10 16:53:16
news-image

2025 ராகு - கேது பெயர்ச்சிப்...

2025-03-10 14:37:26
news-image

நிம்மதி ஏற்படுவதற்கான சூட்சம பரிகாரம்..!?

2025-03-09 13:12:58
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண...

2025-03-07 17:56:13