வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த விசேட நடவடிக்கை இதற்காகவே கள ஆய்வை மேற்கொள்ள அமைச்சர் குழு வருகை தந்ததாக கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
காங்கேசன் துறை தொழிக்சாலைக்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் முடப்பட்டுள்ள பாரிய கைத்தொழில் சாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலும் குறித்த பகுதிகளை கைத்தொழில் வலயமாக மாற்றுவதற்கான சாதக பாதக நிலமைகளை ஆராய்வதற்கும் அமைச்சர்குழுவினர் வருகை தந்துள்ளனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரிய தொழிற்சாலைகளுக்கு முன் நின்று கருத்துக்களை கூறவேண்டிய நாம் இன்று காடுகளாக உள்ள கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைக்கு முன் நின்று கருத்துகளை பகிரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
மீண்டும் இப்பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு கூடிய கவனம் எடுக்கவுள்ளோம்.
1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு எத்தகைய வியப்புடன் செயலாற்றிய கைக்தொழில் கள் இன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது .
இங்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து தொழில் சாலைகளை மீள செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னேடுக்கவுள்ளோம். அவ்வாறு முன்னேடுக்கின்ற வகையில் வடக்கு மாகாணத்தின் கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் முக்கியமாக காங்கேசன் தூறை சீமேந்து தொழிற்சாலையை மீள அமைப்பதற்கு புனரமைப்பது தொடர்பில் ஆய்வுசெய்வதற்கு வந்துள்ளோம்.
எமது நாடு பல்வேறு பிரச்சினையால் இருப்பதால் எமது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் இத்தகைய சுழலில் நாங்கள் இத்தகைய முயற்சிகளை செய்கின்றபோது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க முடியும் இதற்காக கள ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM