வருடந்தோறும் தவக்காலத்தில் நடத்தப்படும் பெரிய திருச்சிலுவைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெறவுள்ளது.
கொழும்பு புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் சிலுவைப் பாதையானது கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நிறைவு பெறும்.
புதுச்செட்டித் தெரு வியாகுல மாதா ஆலயத்தில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு திருச்சிலுவைப் பாதை ஆரம்பமாகும்.
அங்கிருந்து ஜெம்பட்டா வீதி, அந்தோனியார் வீதி, செக்கடித்தெரு, ஆண்டிவால் வீதி, கண்ணாரத் தெரு, ஜிந்துப்பிட்டித் தெரு, வன்றோயன் வீதி, மீண்டும் ஜெம்பட்டா வீதி, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தை, பொன்ஜின் வீதி வழியாக கொட்டாஞ்சேனை லூசியாஸ் பேராலயத்தை சிலுவைப்பாதை சென்றடையும்.
திருச்சிலுவைப் பாதையை அடுத்து பேராலய முன்றலில் துணை ஆயர் அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
திருச்சிலுவைப் பாதைக்கான ஏற்பாடுகளை வழமை போல் கொழும்பு ஜோசப்வாஸ் மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM