(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொழும்பு நகரில் நீண்டகாலமாக அடுக்குமாடிகள் மற்றும் சேரிப்புறங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் இல்லாமையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.
அதனால் அரசாங்கம் இந்த மக்கள் வாழ்ந்துவரும் வீடுகளுக்கு உரிமை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பு நகரில் நாகரிக சேரிப்புர வாழ் மக்கள் மற்றும் நாகரிக அடுக்குமாடிகளில் குடியிருப்பாளர்கள் இருக்கின்றனர்.கோட்டபாய ராஜபக்ஷ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது அந்த மக்களை அவர்கள் 30, 40 வருடங்களாக வாழ்ந்துவந்த இடங்களில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு பலவந்தமாக அழைத்துச்சென்று குடியமர்த்தியிருந்தார்.
ஆனால் அவர்களுக்கு இதுவரை வீட்டு உரித்து பத்திரம் வழங்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இதுதொடர்பில் இந்த வீட்டு உரித்து பத்திரங்களை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை.
இந்த மக்களுக்கு வீட்டு உரித்து பத்திரம் இல்லாமையால் அவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்க முடியாத நிலை இருக்கிறது.
அதேநேரம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவர்களுக்கு வங்கிக்கடன் ஒன்றைக்கூட பெற முடியாது. கடந்த அரசாங்க காலத்தில் ரணில் விக்ரமசிங்க தேர்தலை நோக்காக்கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அதில் உரித்து பத்திரம் வழங்கும் கண்காட்சியும் நடத்தப்பட்டிருந்தது. கொழும்பு ஹேனமுல்லை பிரதேசத்திலும் வீட்டு உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஆனால் மொத்தமாக 167 வீட்டு உரித்து பத்திரங்களே வழங்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் இந்த வீடுகளுக்கு தவணை கட்டணம் செலுத்த வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதனால் அந்த மக்கள் அன்றில் இருந்து தவணை கட்டணம் செலுத்துவதை நிறுத்தினார்கள்.
ஆனால் தற்போது அந்த வீடுகளுக்கு வட்டியுடன் தவணை கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்து பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இதற்கு பொறுப்புக்கூற யாரும் இல்லை.
இது அந்த மக்களின் தவறு அல்ல. அதனால் இந்த மக்களின் அதிக வட்டி வீதத்தை கழித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் இவர்களின் இந்த வீடுகளுக்கு உரித்து பத்திரத்தை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வீடுகள், அதி வசதி வாய்ப்பான வீடுகள் அல்ல. கோழிக்கூடுகள் போன்றவை.450 சதுர அடியே இருக்கிறது.
அதில் முகாமைத்துவ குழுவொன்றை நியமித்து அவர்களிடம் பணம் அறவிட்டு வருகின்றனர்.ஆனால் அந்த அடுக்குமாடிகளில் மின் உயர்த்தி பழுதடைந்தால் அதனை சரி செய்ய வருவதில்லை.
நோயாளர்களை அடுக்குமாடிகளில் இருந்து இறக்கும்போது சில நோயாளிகள் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் இந்த மக்களுக்கு வீட்டு உரித்து வழங்கி, அவர்களே முகாமைத்துவ குழுவொன்றை அமைத்து அதனை முன்னெடுத்துச்செல்ல இடமளிக்க வேண்டும்.
அல்லது சரியான முகாமைத்து குழுவொன்றை அமைக்க நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் கொழும்பு நகரில் சேரிப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்கள் மிகவும் சிறிய குடிசைகளிலேயே வாழ்ந்துவருகின்றனர்.அவர்களில் அதிகமானவர்கள் அங்காடி வியாபாரம் செய்துவருகின்றவர்கள்.
அவ்வாறான நிலையில் அவர்களி்ன நீர் கட்டணம் 15ஆயிரம் ரூபா நிலுவையில் இருப்பதாக தெரிவித்து நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இது நியாயம் இல்லை. சேரி வீடுகளில் வாழ்பவர்களின் நீர் துண்டிக்கப்பட்டால் அவர்கள் மலசலக்கூட தேவைகளுக்கு எங்கு செல்வது?
அதேநேரம் அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு அந்த வீடுகளை அபிவிருத்தி செய்ய முடியாமல் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கவேண்டி ,இருக்கிறது. ஏனெனில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு உரிமை இல்லை. உரிமை இல்லாமையால் விட்டு உரித்து இல்லை.
வீட்டு உரித்து இல்லாமையால் அவர்களின் பிள்ளைகளை அருகில் உள்ள சிறந்த பாடசாலைக்கு அனுப்ப முடியாது. அவ்வாறான மக்களின் வீடுகளில் நீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவர்கள் எவ்வாறு வாழ்வார்கள் என்பதை அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM