கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

07 Mar, 2025 | 02:53 PM
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட  நிலையில்,குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 14 இந்திய மீனவர்களும் நேற்று வியாழக்கிழமை (06) இரவு  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட போதே  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் உடனடியாக தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

தாழ்வுபாடு கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (7) காலை குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தந்து குறித்த மீனவர்களை பார்வையிட்டதோடு,அவர்களுக்கு தேவையான உதவிகளை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05