முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கலுக்குச் சென்று திரும்பியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி சந்தி புத்தூர் மீசாலை வீதியில் காளிகோவிலுக்கு அருகாமையில்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கலுக்குச் சென்று இன்று அதிகாலை 5 மணயளவில் நடந்து வீடு திரும்பியபோது டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தும் டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் சரசாலை வடக்கைச் சேர்ந்த 65 வயதுடைய விநாசித்தம்பி சிவசுந்தரம் என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.