(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தின் புனித சின்னமான சிலுவையை அகெளரவப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ள சம்பவம் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களை மனங்களை நோகடிக்கச் செய்துள்ளதாக தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளரும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளருமான அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் கொழும்பு றோயல் கல்லூரி அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மதங்களையும், அவர்களின் புனித சின்னங்களை அகெளரவப்படுத்தல் மற்றும் அசெளகரியங்கள் ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதத்தில் வாழ்வது எப்படி என்பதை உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தும்படி அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
"உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் நேற்று முன்தினம் (05) தவக்காலத்தின் ஆரம்ப தினமான விபூதிப் புதன்தினத்தை அனுஷ்டித்திருந்தனர். இதுபோன்றதொரு புனிதமான நாளில் கிறிஸ்தவர்களின் மனம் நோகும்படியாக கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு அமைந்திருந்தமை வருத்தமளிக்கிறது.
கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தின் புனித சின்னமான சிலுவையை அகெளரவப்படுத்தும் விதத்திலான காணொளிப் பதிவொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தமை கிறிஸ்தவ மக்களின் மனங்களை வேதனைக்கு உட்டுபடுத்தியுள்ளது.
மேற்படி சம்பவத்தால் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை உள்ளிட்ட குருக்கள் மற்றும் கத்தோலிக்க மக்கள் அனைவரையும் மனதளவில் பெரும் காயத்தை உண்டு பண்ணியுள்ளது.
நாம் எந்தவொரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஏனைய மதங்களின் புனித சின்னங்களை அகெளரவப்படுத்தல் மற்றும் அசெளகரியங்கள் ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக வாழ வேண்டும் என்பதை உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
கொழும்பு றோயல் கல்லூரியானது மிகவும் சிறந்த தர பாடசாலையாகும். இந்நாட்டை பிரித்தானியர்கள் ஆட்சி செய்திருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு றோயல் கல்லூரியின் முதலாவது அதிபராக சேவையாற்றியவர் ஜோசப் மார்ஷ் அருட் தந்தை ஆவார் என்பதையும் , உங்கள் பாடசாலையின் நீண்ட வரலாற்றுக்கு அவரே முன்னோடி என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM