தபால் தொழிற்சங்கங்கள்  48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதனால் யாழிலும் தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

யாழில் உள்ள பிரதான அஞ்சல் நிலையங்கள், உப அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் அஞ்சல் சேவையினை பெற்றுகொள்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. 

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும்  640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.