புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்றை நாயொன்று கௌவிக்கொண்டு வந்து  வீட்டின் மையப்பகுதியில் வைத்து உறங்கிய சம்பவமொன்று மகியங்கனை  நகர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட பரபரப்பினையடுத்து, சிசுவின் தாயென கருதப்படும்  பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் மகியங்கனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த  சந்தேக நபரான பெண் கணவனுக்கு தெரியாமல், தான் பிரசவித்த ஆண் சிசுவை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளார். இதனைக் கண்ட வீட்டு நாய் மண்ணைக் கிளரி புதைக்கப்பட்ட சிசுவை கௌவிக் கொண்டு, வீட்டின் மத்தியில் வைத்து, அதனருகே உறங்கியுள்ளது.

வீட்டிற்குள் வந்த, பெண்ணின் கணவன் இதனைக் கண்டு, மகியங்கனைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

இதனையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு, மகியங்கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைத்ததுடன், சந்தேக நபரான பெண்ணையும்  கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, மகியங்கனைப்  பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.