கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நாட்டின் சுற்றுலாத்துறை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, அதனை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு விழிப்புணர்வு இணையவழி கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு முன்முயற்சியை முன்மாதிரியாகக்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையவழி கற்கைநெறியானது சுற்றுலாத்துறைசார் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான திறன்களை வழங்குகிறது. அதுமாத்திரமன்றி நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கும், உள்ளுர்வாசிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்கிறது.
கொழும்பில் புதன்கிழமை (5) நடைபெற்ற இந்த இணையவழி கற்றல் தள வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் லிசா வண்ஸ்டால், 'இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான எமது பங்களிப்பினையும், நிபுணத்துவத்தையும் வழங்குவதையிட்டு நாம் பெருமிதமடைகிறோம். இப்பயிற்சியானது சுற்றுலாத்துறைசார் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும். அதன்படி எதிர்வரும் வருடங்களில் இலங்கைக்கு வருகைதரும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வடையும் என நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, 'நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எனவே நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கும், உள்ளுர்வாசிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யவேண்டும். அந்தவகையில் இச்செயற்திட்டம் எதிர்கால சவால்களைக் கையாள்வதற்கு ஏற்றவாறு எமது தொழிற்துறையை வடிவமைப்பதில் ஓர் முக்கிய நகர்வாகும்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM