கோவிலேப் அக்ரிடெக் ஆக்சிலரேட்டர் இன் பிராந்திய தொடக்க செயன்முறை விளக்கதினம் அநுராதபுரத்தில் உள்ள பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி நிலையத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், அரசு அதிகாரிகள், தனியார்துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு, இலங்கை தொடக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பத்து புதுமையான அக்ரி-டெக் தீர்வுகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி.சுனில் ரணசிங்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எந்திரி.எரங்க வீரரத்தின ஆகியோர் பங்கு பற்றினர்.
இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதில் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
கோவிலேப் அக்ரிடெக் ஆக்சிலரேட்டர் எனப்படும் அற்புதமான முயற்சியானது நாட்டின் முதன்மையான புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையமான Hatch இனாலும் அடிமட்ட விவசாய சமூகங்களுடன் ஆழமான உறவைக்கொண்ட முன்னணி தன்னார்வ தொண்டுநிறுவனமான சர்வோதயத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது. இது GATE Foundation ஆல் உதவியளிக்கப்படும் உள்ளடங்கிய டிஜிட்டல் விவசாய மாற்றம் திட்டத்தின் ஒருபகுதி ஆகும்.
Hatch நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மேவன் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் இலங்கை உலகத்தரம் வாய்ந்த வேளாண் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் திறமைகள் மற்றும் முக்கியத்தவத்தை கொண்டுள்ளது எனக்குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள பங்குதாரர்களோடு இணைந்து விசாயத்துறையில் புரட்சியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். இத்தீர்வுகள் தேசியமட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு சிறு விவசாயிகள் இவற்றினூடாக உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்திருக்கும் தன்மை என்பவற்றை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
கோவிலேப் ஆக்சிலரேட்டரின் முதல் குழுவால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளில் ட்ரோனும் அடங்குவதோடு, நெல் மற்றும் தென்னை சாகுபடிகளை தானியங்குபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பம், சன்சார் தொழில்நுட்பம், செயல்படுத்துதல் மற்றும் துல்லியமான விவசாயம், விதைப்பு இயந்திரங்கள், சிறிய அளவிலான முந்திரி பதப்படுத்தும் அலகுகள் மற்றும் மொபைல் மற்றும் பண்ணை மேலாண்மை ஆதரவு, நீட்டிப்பு சேவைகள் மற்றும் சந்தை அணுகலுக்கான இணைய அடிப்படையிலான தளங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்தன பேசுகையில்,
“விவசாயம் என்பது ஒரு வெறுமனே ஒரு தொழில் அல்ல’,இது ஒரு உயிர்நாடி இது நாட்டுக்கு உணவளிக்கிது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துகிறது மற்றம் இயற்கையை வளர்கிறது. மேலும் வேகமாக வளர்ந்து வரும் உலகில் புத்தாக்கம், டியிட்டல் மற்றங்கள் மற்றும் தொழில்முயற்சியாண்மை என்பவற்றினூடக விவசாயிகள் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் ; நாங்கள் விவசாயத்துறையை மட்டும் வலுப்படுத்துவது மட்டுமல்லால் அனைவரும் நிலைத்திருக்கக் கூடிய நெகிழ்வுத்தன்மை மிக்க எதிர்காலத்ததை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், நேரடி செயல்விளக்கங்கள், ஊடாடும் அமர்வுகள் மற்றும் விவசாயிகளுக்கான உள்வாங்கல் செயற்பாடுகள் ஆகியவை இடம்பெற்றன. இந்த தொழில்நுட்பங்களை அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பது எப்படி என்பதைக் காண இது ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருந்தது.
உள்நாட்டு கண்டுபிடிப்புகள் நிஜ-உலக விவசாய சவால்களை எதிர்கொண்டுஇ இலங்கையின் சிறந்த எதிர்காலத்தை விவசாயத் துறையை வடிவமைத்திட, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உற்சாகம் தெரிவித்தனர். உற்பத்தித்திறன், செலவுகளைக் குறைத்தல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைத் தணித்தல். நீண்டகால சவால்களை எதிர்கொள்ளல் என இத்தகைய தீர்வுகள் உதவக்கூடும் என்று பலர் குறிப்பிட்டனர்.
GoviLab ஆனது அரச நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியது. இது விவசாய தேசிய கொள்கைகள் மற்றும் விரிவாக்க சேவைகள் என்பவற்றின் தேவைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டது. இன்றைய தினம் பல விரிவசாய சேவைப்பிரதிநிதிகளால் இது உறுதிப்படுத்தப்பட்டது.
பிராந்திய செயன்முறை விளக்க தினம் புதுமையான தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தியது மட்டுமல்லாமல் அடிக்கோடிட்டுக் காட்டியது. தொடக்க நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் விவசாய சமூகங்கள் இந்தத் தீர்வுகளை தேசிய அளவில் அளவிடும் திட்டங்களுடன் கோவிலேப் ஒரு முக்கிய இடத்தைப் பெற தயாராக உள்ளது. இலங்கையில் விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்பாளர்கள் சிறந்த தூண்டுலை பெற்றுள்ளனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM