திருமண விடயத்தில் சுய முடிவை யார் மேற்கொள்ள கூடாது?

Published By: Digital Desk 2

06 Mar, 2025 | 03:49 PM
image

இன்றைய திகதியில் திருமணம் தொடர்பாக மணமகனும், மணமகளும் பெற்றோர்களின் சம்மதத்துடன் பிரத்யேகமாக ஒருங்கிணைக்கப்பட்ட வைபவத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வாழ்க்கை பற்றிய தீர்க்கமான முடிவை மேற்கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்றங்கள் - இறக்கங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும்  அவற்றை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டு வாழ்க்கையை இனிதாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதே இதன் அடிப்படை. இந்த தருணத்தில் இதுபோன்ற முடிவுகள் பலருக்கும் சாத்தியமாவதில்லை.

உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் குரு வக்ர கிரகமாக இருந்தால் அவர்கள் திருமணம் சார்ந்த விடயங்களில் சுயமாக முடிவை மேற்கொள்ளக்கூடாது. அப்படி மேற்கொண்டால் உங்களுடைய திருமணம் இதன் காரணமாகவே தாமதமாகும். இது மணமகனுக்கும் பொருந்தும். மணமகளுக்கும் பொருந்தும். அதனால் இது தொடர்பான விடயங்களில் பெற்றோர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களை வக்கிர கிரகம் சரியான முடிவினை மேற்கொள்வதிலிருந்து திசை திருப்பும் வலிமை படைத்தது.

மேலும் குரு வக்ரமாக இருப்பவர்கள் திருமணம் சார்ந்த விடயங்களிலும் இல்வாழ்க்கை சார்ந்த விடயங்களிலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக ஸ்ரீ சக்கர வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மனித முகமற்ற விநாயகப் பெருமான், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வ வழிபாட்டை உரிய முறையில் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அதே தருணத்தில் குரு வக்ரம் கொண்ட ஜாதகர் தொழிற்சார்ந்த விடயத்தில் குழப்பம் ஏற்பட்டால் அதாவது சரியான தருணத்தில் உரிய முடிவினை மேற்கொள்வதில் குழப்பம் ஏற்பட்டால் உடனடியாக கிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு இருபத்தி ஒன்று எனும் எண்ணிக்கையில் தோப்புக்கரணத்தை பரிகாரமாக செய்திட வேண்டும். இதனை மேற்கொண்ட உடன் உங்களுக்கான குழப்பமற்ற தீர்க்கமான முடிவு உள் மனதிற்குள் இந்த பிரபஞ்சத்தின் ஊடாக ஏற்படும். அதனை உணர்ந்து முடிவெடுத்தால் வெற்றி நிச்சயம்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் வக்ரம் பெற்றிருந்தாலும் அவர்களும் திருமணம் சார்ந்த விடயத்தில் சுயமாக முடிவை மேற்கொள்ளாமல் பெற்றோர்களின் குறிப்பாக தாயின் முடிவை கடைப்பிடித்தால் வாழ்க்கை சுகமாகும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35
news-image

கல்வியில் இருக்கும் தடையை அகற்றுவதற்கான சூட்சும...

2025-03-10 16:53:16
news-image

2025 ராகு - கேது பெயர்ச்சிப்...

2025-03-10 14:37:26
news-image

நிம்மதி ஏற்படுவதற்கான சூட்சம பரிகாரம்..!?

2025-03-09 13:12:58
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண...

2025-03-07 17:56:13