மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்களில் முயற்சித்து வருகின்றன.
மேலும்,பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர். இவற்றை வெளிக்கொணரும் வகையிலும், ஏனையோரின் மதுசார பாவனையினால் பெண்கள் முகங்கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது.
25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுசார பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர், மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? என்பனவற்றை ஆராயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும்.
ஆய்வறிக்கையின்படி,
54 சதவீதமான பெண்கள் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர், 42 சதவீதமான பெண்கள் உள ரீதியாக பாதிக்கின்றனர், 69 சதவீதமான பெண்கள் பொது இடங்களில் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர்.
பெண்களின் உரிமைகளுடன் இணைத்து மதுசார நிறுனங்கள் அதிகமான விளம்பரங்களை மேற்கொள்ளுகின்றன. எனினும் 37 வீதமான பெண்கள் இன்னமும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை.
குறிப்பாக மதுபான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்கு பெண்களை பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன.
54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது எமது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பல்வேறு தரப்பினர்களின் மதுசார பாவனையால் பெண்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 27.4 வீதமான பெண்கள் அயலவர்களின் பாவனையாலும், 27 வீதமான பெண்கள் இணந்தெரியாதோர்களின் பாவனையாலும், 20 வீதமான பெண்கள் உறவினர்களின் பாவனையாலும் பிரச்சினைகளுக்கு ஆளாகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மதுசார பாவனையின் காரணமாக 42 வீதமான பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 38.2 வீதமான பெண்கள் தமது மகிழ்ச்சி சீர்குழைவதாக குறிப்பிட்டுள்ளனர். 24 வீதமானோர் தமது சுதந்திரம் மட்டுப்படுவதாகவும், 27.3 வீதமானார் பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பதாகவும், 12 வன்முறைகளுக்கு ஆளாகுவதாகவும், 18 வீதமான பெண்களின் கல்விக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் 69 பெண்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் தாங்கள் உட்பட தங்களது நண்பிகளும் இவ்வாறான அசௌகரியங்களுக்கு ஆளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் அசௌகரியப்படும் பெண்களில் அதிகமானோர் அவற்றிற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை. 61 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியத்திற்கு ஆளாகினாலும் அதற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை என குறிப்பிட்டிருந்தனர். 11 வீதமான பெண்கள் அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களை மதுசார பாவனைக்கு, ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் வெவ்வேறு வழிகளிலும் முயற்சிப்பதாக 40 வீதமான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
பெண்களின் உரிமையுடன் இணைத்து மதுசாரத்தை விளம்பரப்படுத்துவதாக 29 வீதமான பெண்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் 34 வீதமானோர் இது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகக் காணப்பட்டமை ஆய்விலிருந்து தெரிய வருகின்றது.
மதுசார நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விளம்பரப்படுத்துவதற்காக பெண்களை விளம்பர நாமமாக பயன்படுத்துவதால் பெண்களின் உரிமை மீறப்படுவதாக 64 வீதமான பெண்கள் கூறியிருந்தனர்.
பெண்களை இலக்கு வைத்து திரைப்படங்களில் மதுசார விளம்பரங்கள் இடம்பெறுவதாக 54 பெண்கள் குறிப்பிட்டதோடு, 43 வீதமானோர் முகப்புத்தகங்களில் விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், 29.3 வீதமானோர் டிக்டொக் மூலம் விளம்பரம் இடம்பெறுவதாகவும், வெவ்வேறு சமூக வலைதளங்களின் ஊடாக இலக்கு வைக்கப்பட்டு விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், 24.2 வீதமானோர் நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இம்பெறுவதாகவும், 23.6 வீதமானோர் ஒன்றுகூடல்களின் போது விளம்பரப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
பெண்கள் உடல், உள ரீதியாக சமூகத்தில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற மிகவும் முக்கியமான தரப்பினராகும். ஆகவே ஆண்கள் ஏற்கனவே சிக்கியிருக்கின்ற மதுசாரம் எனும் பிரயோசனமற்ற வலையில் பெண்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை குறைப்பதற்காகவும் பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் விளப்பரங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றது.
அவையாவன,
மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கமைய பெண்கள்,இளைஞர்கள், என அனைத்து தரப்பினரையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் விளம்பரங்கள் இன்னமும் வெவ்வேறு வலைதளங்களில் மேற்கொள்ப்படுகின்றது. ஆகவே NATA சட்டத்தை வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.
மதுசாரம் என்பது பிரயோசனமற்ற ஒன்று என்கின்ற விழிப்புணர்வை பெண்கள் ஏற்படுத்த வேண்டும் ; மதுசாரம் எனும் போர்வையில் மேற்கொள்ளுகின்ற தொந்தரவுகளுக்கு பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு பெண்களை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எமது நாடானது மிகவும் கலாச்சாரம் பொருந்திய நாடாகும் “அம்மா”எனும் பதம் அதிலுள்ள அன்பு, அரவணைப்பு,மதிப்பு ஆகியவை அனைத்து பெண்களிடத்திலும் செறிந்து காணப்படுகின்ற அழகிய பெறுமதியான சமூகம் வாழும் நாடாகும்.
ஆகவே, இப்பெறுமதியை சீர்குழைப்பதற்கு மதுசார நிறுவனங்கள் பெரிதும் முயற்சிக்கின்றன. ஆகவே பெண்களை இலக்கு வைத்து மதுசார நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து, அதற்கு ஏமாறாமல், அவற்றை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
பெண்களின் சுதந்திரம், உரிமை என்பன தொடர்பான தெளிவு மற்றும் இவற்றை காரணமாகக்கொண்டு எமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு எவ்வாறு மதுசாரம், மற்றும் புகையிலை நிறுவனங்கள் திட்டமிடுகின்றன என்கின்ற தெளிவும் சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM