அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மகன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க மகன் தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கையில் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை கைது செய்யப்பட்டு மேலதீக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றது.