(நெவில் அன்தனி)
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், யாழ். மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகிய இருவரே இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்கள் ஆவர்.
இரண்டு கல்லூரிகளினதும் இந்த வருட பெறுபேறுககளை நோக்கும்போது இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் கொண்டவையாகத் தெரிகிறது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டி மிகவும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அதாவது மூன்றுக்கும் மேற்பட்ட வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறுவது போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது.
சென். ஜோன்ஸ் கல்லூரி இந்த வருடம் விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டியதுடன் இரண்டில் தோல்வி அடைந்துள்ளது.
யாழ். மத்திய கல்லூரி விளையாடிய 9 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றதுடன் 2இல் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த வருடம் வரை நடைபெற்ற 117 வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி 39 - 29 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 41 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளதுடன் 7 போட்டிகள் தொடர்பான விபரங்கள் இல்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
கடந்த 4 அத்தியாயங்களில் இரண்டு கல்லூரிகளும் மாறிமாறி வெற்றிபெற்றுவந்துள்ளதால் இந்த வருடமும் வடக்கின் சமரில் முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென். ஜொன்ஸ் கல்லூரி கடந்த வருடம் நேசகுமார் எபநேசர் ஜெய்சால் தலைமையில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
யாழ். மத்திய கல்லூரி 2023இல் ஆனந்தன் கஜன் தலைமையில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
சென். ஜோன்ஸ் அணிக்கு இம்முறை 6ஆம் வருட வர்ண வீரர் ஜெயச்சந்திரன் அஷ்நாத் தலைவராகவம் 4ஆம் வருட வர்ண வீரர் முர்பின் ரெண்டியோ உதவித் தலைவராகவும் விளையாடுகின்றனர்.
அவர்களைவிட 3ஆம் வருட வர்ண வீரர்களான அபிஜோய்ஷாந்த், குகதாஸ் மாதுளன் ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர்.
யாழ். மத்திய கல்லூரிக்கு இம் முறை 5ஆம் வருட வர்ண வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் தலைவராகவும் 5ஆம் வருட வீரர் சதாகரன் சிமில்டன், 3ஆம் வருட வர்ண வீரர் தகுதாஸ் அபிலாஷ் ஆகியோர் இணை உதவித் தலைவர்களாகவும் விளையாடுகின்றனர்.
அவர்களைவிட விக்னேஸ்வரன் பாருதி, முரளி திசோன், கணேசலிங்கம் மதுசுதன் ஆகியோர் 3ஆம் வருட வீரர்களாவர்.
வடக்கின் சமரில் தனி ஒருவருக்கான அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் சென். ஜோன்ஸ் வீரர் எஸ். சுரேன்குமார் ஆவார். இவர் 1990இல் நடைபெற்ற வடக்கின் சமரில் 145 ஓட்டங்களைக் குவித்தார்.
அரவது மகள் அமுருதா சுரேன்குமார், 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார்.
ஓர் இன்னிங்ஸில் 26 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள் என்ற அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை 1951இல் பதிவு செய்தவர் யாழ். மத்திய கல்லூரியின் வி. சண்முகம் ஆவார்.
சென். ஜோன்ஸ் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: ஏ. சஞ்சயன் (பயிற்றுநர்), எஸ். திலீபன் (பொறுப்பாசிரியர்), உதயணன் அபிஜோய்ஷாந்த், ஜெயச்சந்திரன் அஷ்நாத் (தலைவர்), வி.எஸ்.பி. துசீதரன் (அதிபர்), முர்பின் ரெண்டியோ (உதவித் தலைவர்), குகதாஸ் மாதுளன், சி. ஏ. அரவிந்தன் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: சிவகுமார் ஜோன் நதேனியா, இளங்கோ வெண்டட் மரியோ, சற்குணராஜா வினுக்ஷன், ரேமண்ட் அனுஷாந்த், சௌந்தரராஜன் ஆதர்ஷ், விஜயராஜா சஞ்சய், யோகசீலன் சாருஜன், கிருபாகரன் சஞ்சுதன், தினேஷ் லருன், பின்வரிசை: நாகேஸ்வரன் கிரிஷான், கஜந்தன் மிதுன், சிவசங்கர் கிரிஷான், ஜோன் ஸ்டபர்ட் ஆர்னல்ட், ராஜ்குமார் நிதுர்சிஜன்.
யாழ். மத்திய கல்லூரி அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: வி. பாருதி, கே. பாலகுமார் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), ரஞ்சித் குமார் நியூட்டன் (தலைவர்), எஸ். இந்திரகுமார் (அதிபர்), தகுதாஸ் அபிலாஷ் (இணை உதவித் தலைவர்), எவ். குலேந்திரன் ஷெல்டன் (பயிற்றுநர்), சதாகரன் சிமில்டன் (இணை உதவித் தலைவர்), எஸ். மணிமாறன் (பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: செல்வராசா திசோன், மதீஸ்வரன் கார்த்திகன், சயந்தன் நியந்தன், நாகராசா சஜித், கணேசலிங்கம் மதுசுதன், தவராசா வேனுஜன், ரஞ்சித் குமார் அக்ஷயன், முரளி திசோன், ஏ. அபிஷேக், பி. நவிந்தன், ஏ. ஷாராளன், அன்டோநேசன் தனுஷன், பின்வரிசை: உதயராசா வோல்டன், ஜெயசீலன் ஜெனோஷன், வெலன்டைன் ஹரிஷ், ஸ்ரீதரன் சாருஜன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM