தபால் சேவை ஊழி­யர்கள் நேற்று நள்­ளி­ரவு முதல் நாடு தழு­விய ரீதியில் பணி பகிஷ்­க­ரிப்பை ஆரம்­பித்­துள்­ளனர். இரு நாட்கள் தொட­ர­வுள்ள குறித்த பணி பகிஷ்­க­ரிப்பை ஒன்­றி­ணைந்த தபால் தொழிற்­சங்­கங்­களின் முன்­னணி ஏற்­பா­டு­ செய்­துள்­ளது. பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்தே  தபால் ஊழி­யர்கள் இந்த பணி பகிஷ்­க­ரிப்பை ஆரம்­பித்­துள்­ளனர்.  

Image result for தபால் ஊழி­யர்கள் பணி பகிஷ்­க­ரிப்பில்

இந்த பணி பகிஷ்­க­ரிப்பு  தொடர்பில் ஒன்­றி­ணைந்த தபால் சேவை தொழிற்­சங்க முன்­ன­ணியின் இணை அமைப்­பாளர் காரி­ய­வசம் குறிப்­பி­டு­கையில், 

நுவ­ரெ­லியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்­டடங்­களையும் அதன் காணி­யையும் இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. எனவே அத்­திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும் மற்றும் தபால் சேவை ஊழி­யர்கள் நீண்ட காலம்  எதிர்­கொள்ளும் நிர்­வாக ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு முன்­வைக்க வேண்டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை முன்­வைத்தே பணி பகிஷ்­க­ரிப்பில்  ஈடு­பட்­டுள்ளோம் .  

இலங்­கை­யி­லுள்ள தபால் திணைக்­களம் மிகவும் பழ­மை­வாய்ந்த திணைக்­க­ள­மாகும். எனினும் அர­சாங்கம் தபால்­துறை மற்றும்  தபால் சேவை­யா­ளர்கள் மீது  உரிய கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சரித்­திர முக்­கி­யத்­து­வம் ­வாய்ந்த நுவ­ரெ­லியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்­ட­டங்­க­ளையும் காணி­யையும் இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­வதற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. ஆகவே அர­சாங்கம் அத்­திட்­டத்தை கைவிட்டு நாட்­டி­லுள்ள தபா­ல­கங்­களைப் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தபால்துறை ஊழி­யர்கள் நீண்ட கால­மாக நிர்­வாக ரீதி­யி­லான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். எனினும் அதற்கு இது­வ­ரையில் எவ்­விதத் தீர்வும் முன்­வைக்­க­ப்படவில்லை. 

கடந்த ஆட்­சியின் போதும் இது தொடர்­பி­லான கோரிக்­கை­களை  முன்­வைத்தோம். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்­னரும் இது தொடர்பில் பல முறை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். அதன்­போது குறித்த பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வு முன்­வைப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது. ஆயினும் இது­வ­ரையில் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

ஆக­வேதான் நாம் இக்­கோ­ரிக்­கை­களை முன்­வைத்து இரு நாள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளோம்.   எமது  கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதி

யில் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட வுள்ளோம் என்றார்.