கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் இறுதிநாள் உற்சவம் இன்று நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன, மத பேதமின்றி இத்திருத்தலத்துக்கு வந்து தமது கோரிக்கைகளையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறார்கள். பலர் புனித அந்தோனியாரைப்பற்றிய பூரண விபரத்தை அறிய ஆவலாயுள்ளனர்.
போர்த்துக்கல்லில் வசித்துவந்த பெரும் செல்வந்தரான மார்டின் வின்சன்ரே டீ புளோஸ் என்பவருக்கும் திரேசா பயஸ் தவரே என்பவருக்கும் குழந்தையாகப் பிறந்தவரே அந்தோனியாராவார்.
அந்தோனியாரின் பெற்றோரும் உறவினரும் செல்வந்தர்களாக விளங்கியதால் அந்தோனியாரை நன்கு படிப்பித்து பெரிய உயர் தொழிலில் அமர்த்த வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்தது. ஆயினும் அந்தோனியார் மறைக்கல்வியையே விரும்பிப் படித்தார்.
ஆகவேஇ பெற்றோரின் விருப்பம் நிறைவேறாமல் போகப்போகிறது என்பதை பெற்றோர் உணர்ந்தனராயினும் தனது மகன் இறைவனின் தொண்டனாகப் போகிறார் என்பதால் மன ஆறுதலடைந்தனர்.
அந்தோனியார் தனது 15ஆவது வயதில் தனது செல்வ குடும்பத்தில் இருந்து பிரிந்து துறவிகள் தங்கும் மடத்திற்கு சென்று தங்கத் தொடங்கினார். மடத்தில் தங்கிய அந்தோனியார் தனது இருபத்தைந்தாம் வயதில் குருப்பட்டத்தை பெற்றார்.
ஆரம்பத்தில் அகஸ்தீனியர் மடத்தில் தங்கியிருந்த புனிதர் பின்னர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். பின்னர் தனது பெயரான பேடினட் என்பதை மாற்றி அந்தோனி என வைத்துக்கொண்டார். அவரால் வைக்கப்பட்ட பெயரே இன்றும் நிலைத்து இருக்கிறது. பேடினட் அந்தோனி என மாறினார். நாம் அந்தோனியார் என கௌரவமாக அழைப்பது அப்பெயரையேயாகும்.
அந்தோனியார் நீண்டகாலப்பணி பாதுவா திருத்தலத்துடன் தொடர்புபட்டது. இத்திருத்தலத்தின் உட்பகுதியின் ஒரு பகுதியில் அந்தோனியாரின் தேவாலயம் உண்டு. ஒன்பது மாபிள்களாலான சுவரைக் கொண்ட இத்தேவாலயத்தில் அந்தோனியாரின் புதுமைகள் சில அம்மாபிள்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இங்கு அந்தோனியாரின் திருநாக்கு உடலின் வேறு சில பகுதிகள் ( THE TREASURY CHAPEL OF THE RELICS) என்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. அவரது மேலங்கியும் பாதுகாப்பான கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. பாக்கியவான்கள் பலர் இவற்றைத் தரிசித்துச் செல்கின்றனர்.
பாதுவா புனித தேவாலயத்தில் இருந்து அந்தோனியாரின் உடலின் பாகங்கள் சில கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தின் 175ஆவது வருட ஜுபிலி விழாவின் போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இத்திருத்தலத்தில் இன்றும் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல பாகங்களிலிருந்தும் இப்புனிதரின் உறுப்புக்களை வணங்கவும் அவரை அடக்கம் செய்த பெட்டியை தொடவும் புனிதரின் பாதம் பட்ட ஆலயத்தை விழுந்து கும்பிடவும் பல்லாயிரக்கணக்கான பாக்கியவான்கள் இங்கு வந்த வண்ணமே இருக்கின்றனர்.
இறந்தும் இறவாமல் என்றும் வாழும் புனித அந்தோனியார் ஜெபத்தால் இறைவனை அடையலாம் என்பதை நிஜவாழ்க்கையில் காட்டியவராகிறார்.
இப்புனிதரின் ஆலயமே இன்று கொச்சிக்கடையில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் களி மண்ணால் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி தேவாலயம் இன்று வானளாவி நிற்கிறது. தினந்தோறும் மக்கள் இங்கு இனஇ மதபேதமின்றி வணங்கிச்செல்கின்றனர். நாட்டின் முதற் பிரஜை முதல் சகல பிரசைகளும் வணங்குகின்ற தேவாலயம் இதுவாகும். இத்தேவாலயம் கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்திருப்பது நாம் செய்த பாக்கியமாகும்.
ஒரு குறுகிய வாழ்நாளில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து தனது செபத்தால் பல புதுமைகள் செய்த புனித அந்தோனியார் 36ஆவது வயதில் இறந்தார் எனப்படுகிறது.
1231ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13ஆம் திகதி இறந்தார். அந்தோனியார் இறக்கும் போது கூட எனது இறைவனைக் காண்கிறேன் “ I see my Lord” என்று அருகில் இருந்தவர்களுக்குக் கூறிக்கொண்டே பாதுவாவுக்கு அருகில் உள்ள இடத்தில் இறந்தார்.
சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM