17ஆவது எடிசன் திரை விருதுகள் விழாவானது எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி மாலை மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள Spice Arena அரங்கில் நடைபெறவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் மலேசிய ரசிகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு 50க்கும் மேற்பட்ட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு விருது மற்றும் கலை நிகழ்வுகளை படைக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்திய கலைஞர்களும் கலை நிகழ்வுகளை நடத்தவுள்ளனர்.
இந்த மாபெரும் விழாவினை பினாங்கு மாநில முதல்வர் ஆரம்பித்து வைக்கவும், பினாங்கு மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வினை ஆரம்பித்துவைக்குமாறு பினாங்கு மாநில முதல்வருக்கு எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க Myticket Asia என்ற இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM