புளூமஃபீல்ட் - என்.சி.சி. மோதும் SLC மேஜர் லீக் இறுதிப் போட்டி

Published By: Vishnu

04 Mar, 2025 | 08:17 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான SLC மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் புளூம்ஃபீல்ட் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கழகமும் (BC&AC) நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் (NCC) மோதவுள்ளன.

லீக் சுற்று 3 நாள் போட்டியாக நடத்தப்பட்ட போதிலும் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நாளை புதன்கிழமை (05) ஆரம்பமாகவுள்ள இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நான்கு நாட்களைக் கொண்டதாக அமையும்.

இந்த இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. மேலும் இந்த இரண்டு அணிகளிலும் தேசிய வீரர்கள் உட்பட பிரபல வீரர்கள் இடம்பெறுவதால் இந்தப் போட்டியில் கணிசமான ஓட்டங்கள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ குழுவில் இடம்பெற்ற புளூம்ஃபீல்ட் 8 போட்டிகளில் 4இல் வெற்றிபெற்றதுடன் 4 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இக் கழகம் சார்பாக ரவிந்து பெர்னாண்டோ (ஒரு சதம் உட்பட 411 ஓட்டங்கள், 49 விக்கெட்கள்) சகலதுறைகளிலும் பிரகாசித்துள்ளார்.

அவரைவிட ரொன் சந்த்ரகுப்தா (ஒரு சதம் உட்பட 488 ஓட்டங்கள்), அணித் தலைவர் நிப்புன் கருணாநாயக்க (6 அரைச் சதங்களுடன் 455), கசுன் அபேரத்ன (ஒரு சதம் உட்பட 301) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் சஹான் நாணயக்கார (33 விக்கெட்கள்),  இசித்த விஜேசுந்தர (19), ஜெவ்றி வெண்டசே (11) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.

பி குழுவில் இடம்பெற்ற என்.சி.சி. 8 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றதுடன் 5 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

என்.சி.சி. சார்பாக கமில் மிஷார (3 சதங்களுடன் 713 ஓட்டங்கள்), லஹிரு உதார (2 சதங்களுடன் 642), அணித் தலைவர் சஹான் ஆராச்சிகே (3 சதங்களுடன் 594), நிரோஷன் திக்வெல்ல (ஒரு சதத்துடன் 522), கவின் பண்டார (ஒரு சதத்துடன் 446), அஹான் விக்ரமசிங்க (ஒரு சதத்துடன் 380) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் அஷேன் டெனியல் (22 விக்கெட்கள்), சாமிக்க கருணாரட்ன (18), அசேல் சிகேரா (16), லசித் எம்புல்தெனிய (13), சம்ப்பத் நிஷ்ஷன்க (12) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு அணிகளினதும் வீரர்களை ஒப்பிடுகையில் என்.சி.சி. வீரர்கள் திறமைசாலிகளாக காணப்படுகின்றனர்.   எனவே இப் போட்டியில் அக் கழகம் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதேவேளை, புளூம்பீல்ட் அணியினர் பொறுப்புணர்வுடன் விளையாடினால் போட்டி முடிவை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33
news-image

முதலாவது தலைவராக பொறுப்பேற்கிறார் குசல் மெண்டிஸ்...

2026-08-10 12:33:35
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:47:51
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில்...

2026-08-10 08:59:45
news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45