(நெவில் அன்தனி)
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு 265 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவர் பெற்ற அரைச் சதங்கள் அவுஸ்திரேலியாவை கௌரவமான நிலையில் இட்டது.
உபாதைக்குள்ளான மெட் ஷோர்ட்டுக்கு பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட கூப்பர் கொனலி ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (4 - 1 விக்.)
எனினும் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 3 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியை நல்ல நிலையில் இட்டார்.
39 ஓட்டங்களைப் பெற்ற ட்ரவிஸ் ஹெட்டுடன் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் 29 ஓட்டங்களைப் பெற்ற மானுஸ் லபுஷேனுடன் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரியுடன் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் பகிர்ந்தார்.
ஸ்டீவன் ஸ்மித் 96 பந்துகளில் 73 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM