நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ; சந்தேக நபர்கள் கைது, சட்ட திருத்தம் குறித்து சஜித் பிரேமதாச கேள்வி

04 Mar, 2025 | 03:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? அத்துடன் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் அரசாங்கம் எப்போது திருத்தம் மேற்கொள்ளப்போகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம்  கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நிலையியற் கட்டளை  27 , 2 இன் கீ்ழ் இவ்வாறு கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில், 

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துத் சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் பிரசாரங்களில் ஒன்றாகும். 

மேலும் புத்தாக்கம் மற்றும் உயர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி "டிஜிட்டல் பொருளாதாரத்தை” அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக குறிப்பிடப்பட்டாலும், முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் மூலம் முதன்மை நோக்கம் அதுவல்ல என்று தெரிகிறது. எனவே, நான் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறேன், சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

இலங்கையில் காணப்படும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் எப்போது திருத்த எதிர்பார்க்கிறது? இச்சட்டம் திருத்தப்படும் வரை இச்சட்டத்தை வலுவற்றதாக மாற்றுவீர்களா? அவ்வாறு இல்லை என்றால், ஏன்? இந்த சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அல்லது முழுவதுமாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்களில், எத்தனை சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?

முன்மொழியப்பட்டுள்ள வருமான வரித் திருத்தச் சட்டத்தின் மூலம் தகவல் தொழிநுட்பம் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணிக்கு 15வீத வரியை ஏப்ரலில் இருந்து விதிக்க அரசாங்கம் யோசனை முன்வந்துள்ளதோடு, இந்த வரியால் சேவை ஏற்றுமதித் துறையில் எத்தனை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது? இதனால், ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வரிப்பணத்தை தொகை எவ்வளவு?

இந்த வரிகளை வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ள இதுவரை திட்டம் எதனையும் அரசாங்கம் முன்வைத்துள்ளதா?  இந்த வரி விதிப்பால், ஒட்டுமொத்த டிஜிட்டல் பொருளாதாரத்தையும், மாற்று பணமோசடி முறைகளின் மீது ஏற்படுத்தும் உத்வேகம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வுகளை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? எனக் கேட்கிறேன் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09
news-image

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர்,...

2025-04-26 01:34:46
news-image

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய...

2025-04-26 01:21:08