ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்: அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு

04 Mar, 2025 | 12:56 PM
image

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம் மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். பின்னர், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை 3-வது நாள் போராட்டத்தின்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், '' மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) 4-வது நாள் போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதில் மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி: இதற்கிடையே, தங்கச்சிமடம் போராட்ட பந்தலில் மீனவர்களிடம், நேற்று (திங்கள்) மாலை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் தமிழக அரசின் நடவடிக்கைகளை எடுத்துக்கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர். ஆனால், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21
news-image

உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பான மனு...

2026-07-16 13:17:48
news-image

சுற்றாடல் அமைச்சு, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்...

2026-07-16 13:03:33
news-image

எல் நினோ தாக்கத்தால் வறட்சி அதிகரிக்கும்...

2026-07-16 13:09:10
news-image

ஆசியா, ஆபிரிக்காவை இணைக்கும் பாலமாக இலங்கை...

2026-07-16 12:22:08