Effie விருதுகள் 2024 இல் “NDB Talking Calendar” வெள்ளி விருதை வென்றது

04 Mar, 2025 | 01:08 PM
image

NDB வங்கி  அற்புதமான ஊடாடும் செயற்கை நுண்ணறிவு  [AI] நாட்காட்டிக்காக Effie விருதுகள் 2024 IL வெள்ளி விருதைப் பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரமானது வாடிக்கையாளர் அனுபவத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் வங்கி அனுபவங்களின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதற்குமான வங்கியின் புதுமையான அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும்.

2024 ற்கான ஊடாடும் நாட்காட்டியானது, வாடிக்கையாளர் பயணத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பம் மற்றும் வங்கிச் சேவையை இணைப்பதில் NDB இன் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது. 

முன்னோக்கிச் சிந்திக்கும் பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த நாட்காட்டியானது, தொழில்நுட்பம் மற்றும் வசதியின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கி, பாரம்பரிய வடிவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிவேக அனுபவத்தை பயனாளிகளுக்கு  வழங்குகிறது.

NDB Talking Calendar என்பது ஒரு கருவி மட்டுமல்ல, புதிய எல்லைகளை ஆராய்வது, அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் டிஜிட்டல் வங்கியியல்  துறையில் முன்னணியில் இருக்கும் அதன் நிலையை உறுதிப்படுத்தும் வங்கியின் நோக்கத்தின் உறுதியான  அறிக்கையாகும்.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right