யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி

04 Mar, 2025 | 11:23 AM
image

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்  உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேற்று திங்கட்கிழமை (03)  சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார். 

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களும் கோரிக்கை விடுத்து வருவதனால் அதுதொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய மீனவர்களை சிறையில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது 40 நாட்களாக சிறையில் உள்ளபோதும் ஒரேயொரு தடவை மட்டும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

எனவே தொலைபேசியில் உரையாடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு உதவுமாறும், சிறைச்சாலையில் இருந்தாலும் வெளியுலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்திகளை பார்வையிட சிறைக் கூடத்தில்  ஓர்  தொலைக் காட்சி வசதியினை ஏற்படுத்தி தருமாறு இந்திய மீனவர்கள் தரப்பில் கோரப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய, சர்வதேச சக்திகளின் சாசன விரோதச்...

2026-07-21 13:04:39
news-image

2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி:...

2026-07-21 16:21:09
news-image

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது ; 2029...

2026-07-21 16:27:20
news-image

கோட்டாபயவின் ஆலோசனை எங்கள் அரசுக்கு தேவையில்லை...

2026-07-21 16:22:05
news-image

323 கொள்கலன்கள் தொடர்பான செயற்குழுவின் விசாரணைகள்...

2026-07-21 16:30:36
news-image

எமது புதிய ஒன்றிணைவு தமிழ் பேசும்...

2026-07-21 17:03:31
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன...

2026-07-21 17:15:38
news-image

தேசிய ஹஜ் சட்டம் அமுலுக்கு வந்த...

2026-07-21 17:19:40
news-image

வாக்குறுதியளித்த அரசியல் கலாசாரத்தை அரசு கடைப்பிடிக்க...

2026-07-21 17:20:13
news-image

உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதால்...

2026-07-21 17:30:34
news-image

செம்மணி மனித புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற...

2026-07-21 21:50:56
news-image

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும்...

2026-07-21 18:41:40