அறுதி பெரும்பான்மையை நோக்கி செல்லும் மக்ரோன்..!

Published By: Selva Loges

12 Jun, 2017 | 02:01 PM
image

பிரான்சில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வாக்கு பதிவுகளின் முடிவில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி அறுதி பெரும்பான்மையை பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இம்மானுவேல் மக்ரோன், மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை கைப்பற்ற வேண்டுமென்ற நிலையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில், பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது சென்டிரிஸ்ட் கட்சி முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் சுற்று வாக்களிப்புகளின் பிரகாரம், மக்ரோனின் சென்டிரிஸ்ட் கட்சி 32.3% வாக்குகளையும், பிரண்ட் நேஷனல் கட்சி 13.2% வாக்குகளையும் மற்றும் சோஷலிஸ்ட் கட்சிக்கு 9.5% வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பிரான்ஸில் மொத்தமுள்ள 577 பாராளுமன்ற தொகுதிகளில், சுமார் 445 தொகுதிகளில் மக்ரோனின் சென்டிரிஸ்ட் கட்சி வெற்றி பெறுமென தேர்தலுக்கு முன்னைய கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50% அதிகமான வாக்குகளை பெறவேண்டும். அப்படி எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையோ, குறித்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களை கொண்டு 2ஆவது சுற்று தேர்தல், எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸின் நாடுகடந்த 11 தொகுதிகளில் இடம்பெற்ற வாக்குபதிவுகளில், ஜனாதிபதி மக்ரோனின் சென்டிரிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52