எம்முடைய இதயத்துடிப்பு எப்போதும் சமச்சீரானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் முழுவதும் குருதி ஓட்டம் இயல்பாக நடைபெற்று, ஆரோக்கியமாக இயங்க இயலும். விவரிக்க இயலாத சில காரணங்களால் இதயத்துடிப்பு இயல்பான அளவைவிட மிகக் குறைவான அளவிற்கு துடிக்க தொடங்கினால்.. இதனை சீரமைக்க வைத்தியர்கள் தற்போது லீட்லெஸ் பேஸ் மேக்கர் எனும் நவீன கருவியை பொருத்தி முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
எம்மில் சிலருக்கு இதயத்துடிப்பு இயல்பான அளவைவிட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ துடிக்கக் கூடும். இதனை மருத்துவ மொழியில் பிராடிஅரித்மியாஸ் என குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு இதயத் துடிப்பிற்கு தேவையான மின்தூண்டலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இத்தகைய நிலை உருவாகிறது. சிலருக்கு இதயத்துடிப்பு இயல்பான அளவைவிட கூடுதலாகவும் துடிக்கக் கூடும். அதனை சீரான அளவில் துடிப்பதற்காகவும் அவற்றை கட்டுப்படுத்தவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சைகளில் பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப்பட்டு நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தருணத்தில் தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட லீட்லெஸ் பேஸ்மேக்கர் எனும் கருவியை கொண்டு இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.
இதனை சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கு முன் அவர்களுடைய மருத்துவ வரலாறு, அவர்களுடைய இதய துடிப்பின் லயம், அவர்களுடைய இதய துடிப்பு போன்றவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு இத்தகைய நவீன பேஸ்மேக்கர் கருவியை பொருத்துகிறார்கள். இந்தக் கருவி ' ஏஏஏ ' பற்றறியை விட சிறியவை. குறைந்த அளவிலான இதயத்துடிப்பை சீர்படுத்தி இயல்பான அளவிற்கு இதய துடிப்பிற்கு பேருதவி செய்கிறது. இந்த சிறிய அளவிலான கருவி உங்களுடைய இதயத்தின் வலது பக்க அறையில் பொருத்தப்படும். இவை அதிகபட்சமாக நான்கு சென்டி மீற்றர் அளவு தான் இருக்கும். இதனைப் பொருத்துவதற்கு ஒரு மணி தியாலத்திற்குள்ளாகவே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய கருவியை பொருத்திய பிறகு உங்களுடைய இதயத்துடிப்பு சீராக இருக்கும். விவரிக்க இயலாத காரணங்களால் இதயத்துடிப்பு இயல்பான அளவைவிட குறைவானால் இந்த கருவி தானாக இயங்கி மின் தூண்டலை வெளியிட்டு இதயத்துடிப்பை சீரானதாக்கும்.
வைத்தியர் முத்துக்குமரன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM