இன்றைய திகதியில் திருமண உறவில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் தங்களுடைய சுய அடையாளங்களை மாற்றிக் கொள்வதிலும், விட்டுத் தருவதிலும் பிடிவாதம் காட்டுவதால் கணவன்- மனைவி இடையேயான உறவில் விரிசலும் , உறவு மேலாண்மையில் சிக்கலும் ஏற்படுகிறது.
மேலும் கணவன்- மனைவி இடையே உள்ளத்தில் அன்பு இருந்தாலும் அதனை வெளிப்படுத்துவதில் எதிர்பார்ப்புகள் பொய்யாவதால் பிரச்சனை உருவாகி அவை பூதாகரமாக மாறி பிரிவை நோக்கி பயணிக்கும். மேலும் இன்றைய சூழலில் சிறிய விடயங்களுக்கெல்லாம் ஆண்களும், பெண்களும் ஈகோ காரணமாக விட்டு தர மறுத்து, அன்பு நிறைந்த வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள்.
மன அழுத்தத்துடன் வாழவும் பழகிக் கொள்கிறார்கள். இந்த தருணத்தில் கணவன் அல்லது மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டால் இதற்கு மூன்றாம் நபரிடம் தீர்வு காண்பதை விட இறை சக்தியிடம் பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் இதற்கான தீர்வு காண்பது தான் சிறந்தது என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் சிவாலயங்களுக்கு சென்றால் சிவபெருமானின் கருவறைக்கு நேர் பின் பகுதியில் லிங்கோத்பவர் எனும் சிவபெருமானின் சன்னதி இருக்கும். இந்த லிங்கோத்பவரின் சன்னதியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி ஐந்து விளக்குகளை ஏற்றி கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும். இத்தகைய பிரார்த்தனையை தொடர்ந்து மேற்கொண்டு வரும்போது கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினை மறைந்து, இருவருக்குள்ளும் சுய பரிசோதனை தானாக நிகழ்ந்து, இருவரும் மீண்டும் முழுமையான அன்புடன் ஒன்றிணைவர்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM