கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

தங்காலை, மாரகொள்ளிய பிரதேச சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த அந்தப் பெண் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் அலைகளுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். 

சுவீடன் நாட்டை சேர்ந்த 80 வயதான பெண்னே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.