திருகோணமலை மாவட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான விவசாய நிலம் பயிர் செய்கைக்காக மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் திட்டத்தின் பிரகாரம், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான விவசாய நிலத்தை தற்காலிகமாக அப்பகுதி மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (01) கந்தளாய் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோர்கள் கலந்து கொண்டு அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தனர்.
குறித்த தொழிற்சாலை பல வருட காலமாக செயழிலந்து காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM