சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு 48 மணி முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தபால் சேவை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா ஹோட்டலை நடத்த தீர்மானித்தமை மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும், இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.