மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் காட்டுப்பன்றி இறைச்சியை சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் எதிர்வரும் 14ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த சுமார் 8 கிலோ 600 கிராம் பன்றி இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக சுற்றுலா பிரயாணிகள் காட்டு பன்றி இறைச்சியினை விரும்பி உண்பதனால் காட்டுப்பன்றிகளை மிகவும் சூட்சமான முறையில் வேட்டையாடி சிலர் சுற்றுலா பிராயாணிகள் செல்லும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உரிய அதிகாரிகள் அசமந்த போக்கினை காட்டி வருவதாகவும் இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்;.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM