ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.  

யாழ்.செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றார்.

அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்திருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழ்;.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடவேண்டியுள்ளது என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டமொன்றை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை விரைவில் முன்னெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.