எம்மில் பலரும் மாத வருவாய் பிரிவினராக இருந்தாலும்... நாளாந்த வருவாய் பிரிவினராக இருந்தாலும் அல்லது இதை கடந்து தொழில் ரீதியாக வருவாய் ஈட்டுபவராக இருந்தாலும்... கடன் வாங்காமல் இருப்பதில்லை. அவரவர்களுக்கு ஏற்ற அளவில் சிறிய தொகையிலிருந்து பெரிய தொகை வரை கடன் வாங்குகிறார்கள்.
அதனை முறையாக வட்டியுடன் திருப்பியும் செலுத்துகிறார்கள். ஆனால் பல தருணங்களில் கடனுக்கான வட்டியை திருப்பிக் கொடுப்பதில் எதிர்பாராத வகையில் சங்கடங்கள் நேர்வதுண்டு. இந்த தருணத்தில் கடன் கொடுத்தவர்கள் வட்டியை வசூலிப்பதற்காக கொடுக்கும் நெருக்கடி உளவியல் ரீதியாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது மன நலத்தையும், உடல் நலத்தையும் பாதிக்கும். இந்தத் தருணத்தில் கடனை அடைப்பதற்கான எளிய வழிமுறையை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் விவரித்திருக்கிறார்கள்.
சிலர் பெருமாள் ஆலயத்திற்கு சென்றவுடன் நேரடியாக பெருமாளை பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும் வணங்குவதுண்டு. ஆனால் எப்போதும் பெருமாள் ஆலயத்திற்கு சென்றவுடன் முதலில் கருடாழ்வாரை தான் தரிசிக்க வேண்டும். ஏனெனில் கருட பகவான் தான் உங்களுடைய கடன் சுமையை குறைப்பதற்கான வழியை காட்டுபவர்.
பெருமாள் ஆலயத்திற்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சென்று கருடாழ்வாரை தரிசிக்க வேண்டும். 'கடன் சுமையை குறைப்பதற்கு அருள்பாலியுங்கள்' என பிரார்த்திக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த அல்லது ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில் மண்ணால் செய்யப்பட்ட கருடாழ்வார் உருவம் கிடைக்கும்.
அதனை செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் வீட்டிற்கு எடுத்து வந்து செவ்வாய் ஓரையில் தொடர்ந்து ஆறு நாட்கள் பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த கருடாழ்வாரை உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் ஓடும் நதியில் கரைத்து விட வேண்டும். இப்படி செய்யும்போது உங்களுடைய கடன் சுமை குறைய தொடங்குவதை அனுபவத்தில் உணரலாம்.
அதனைத் தொடர்ந்து கருடாழ்வாரின் புகைப்படத்தை உங்களுடைய பூஜை அறையில் அல்லது தொழில் ஸ்தானத்தில் அல்லது வரவேற்பறையில் வைத்து தொடர்ந்து வழிபட்டு வர உங்களுடைய கடன் சுமை குறைவதற்கான சாத்தியக்கூறு புலப்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM