மிரிஹான விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொரலஸ்கமுவ, ரத்தனபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு தொகை திருட்டு இருவெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சிங்கள திரைப்படங்கள் அடங்கிய 19,320 திருட்டு இருவெட்டுக்களை வைத்திருந்ததால் குறித்த நபர் கைதுச்செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும்,கைது செய்யப்பட்டவர் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.