கிழக்கு பிரான்ஸ் நக­ரான ஸ்ராஸ்­போர்க்கில் அதி­வேக ரி.ஜி.வி. புகை­யி­ரதம் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் குறைந்­தது 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

எக்­க­வெர்ஷிம் நகரில் இடம்­பெற்ற பரீ­ட்சார்த்த நட­வ­டிக்­கை­யொன்றின் போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.
அந்தப் புகை­யி­ரதம் தடம்­பு­ரண்ட போது அதில் 49 புகை­யி­ரத தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் இருந்­துள்­ளனர்.
மேற்படி புகை­யி­ரதம் கால்­வா­யொன்றில் விழுந்து தீப்­பற்றி எரிந்­துள்­ளது.அள­வுக்­க­தி­க­மான வேகம் காரண­மா­கவே அந்தப் புகை­யி­ரதம் தடம் புரண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி புகை­யி­ரதம் எதி­ர்­வரும் ஆண்டில் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வி­ருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு போக்குவரத்து துணை அமைச்சர் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.