இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி ஓஞ்சியோகிராம் பரிசோதனை அவசியமா..?

Published By: Digital Desk 2

01 Mar, 2025 | 04:56 PM
image

இன்றைய திகதியில் இருபது வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் கூட முறையான வாழ்க்கை நடைமுறையை கடைப்பிடிக்காததால் இதய பாதிப்பு ஏற்படுவதுடன் மாரடைப்பும் ஏற்பட்டு, உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தருணத்தில் இதய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வைத்திய நிபுணர்கள் ஓஞ்சியோகிராம் அல்லது சி டி ஓஞ்சியோகிராம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள்.  இந்தத் தருணத்தில் எம்மில் பலருக்கும் சி டி ஓஞ்சியோகிராம் பரிசோதனை அவசியமா? என்ற வினா எழும். இதற்கான விளக்கத்தை வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.

பொதுவாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் குறிப்பாக கொழுப்பு படிவுகள் சேகரமாகி அடைப்பு ஏற்பட்டிருந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டமும் குறைய தொடங்கும். இதயத்தில் இருந்து செல்லும் ரத்த ஓட்டமும் குறைய தொடங்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படக்கூடும். இந்த தருணத்தில் வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க ஓஞ்சியோகிராம் அல்லது சிடி ஓஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளலாம் என வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.

ஓஞ்சியோகிராம் பரிசோதனையின் போது தொடை பகுதியிலிருந்து இதயத்திற்கு ஒரு மெல்லிய குழாயை உட்செலுத்தி பாதிப்பின் தன்மையை அதாவது ரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனை அனைத்து நோயாளிகளுக்கும் மேற்கொள்ளலாம்.

சி டி ஓஞ்சியோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொள்ளும் போது கதிர்வீச்சு இருப்பதாலும், அதில் பாதிப்பினை கண்டறிவதற்காக பிரத்யேக திரவத்தை செலுத்துவதாலும் இத்தகைய பரிசோதனையை அனைவருக்கும் பரிந்துரைக்க இயலாது. பாதிப்பின் தன்மை,வயது,ஆரோக்கியம், என சில அம்சங்களை அவதானித்த பிறகு தான் அவர்களுக்கு சிடி ஓஞ்சியோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.

ஆனால் சி டி ஓஞ்சியோகிராம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கும். இதில் ரத்த நாள அடைப்பின் நீளம், அகலம், கொழுப்பு படிவத்தின் அடர்த்தி , குருதி ஓட்டத்தின் தன்மை என பல்வேறு விடயங்களை துல்லியமாக அவதானிக்கலாம்.

வைத்தியர் முரளிதரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15