மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு நிதி அளித்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பத்திற்கு நிதி அளித்தவர் என்ற சந்தேகத்தின் வத்தளை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த கொலை சம்பவம் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இடம்பெற்றது என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.