எம்மில் பலரும் கடினமாக உழைப்பார்கள். புத்திசாலித்தனமாக உழைப்பார்கள். ஆனால் வருவாய் என்பது ஒரு எல்லைக்கு மேல் வராது. இதனால் மனதளவில் சோர்வடைந்து அவர்களிடம் மறைந்திருக்கும் மனித வளத்தை தொடர்ந்து பாவிக்காமல் சோம்பலுக்கு இடம் அளிப்பர். இதனால் அவர்களின் முன்னேற்றம் தடைப்படும். அத்துடன் அதிர்ஷ்டம் இல்லை என புலம்பவும் தொடங்கி விடுவர்.
இந்த தருணத்தில் இந்தப் பிறவியில் எமக்கு வரமாக அளிக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு எளிய சூட்சம குறிப்பு ஒன்றினையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அளித்திருக்கிறார்கள்.
எம்முடைய மண்ணில் இந்தியாவைப் போல் யானைகளின் எண்ணிக்கை இல்லை என்றாலும் ..இந்தியாவைப் போல் ஆலயங்களில் யானையிடம் ஆசீர்வாதத்தை பெறுவதும் கடினம். ஆனால் சில நாடுகளில் யானை மீது சவாரி செய்யலாம்.
அது போன்ற ஒரு நாட்டினை தெரிவு செய்து யானை மீது சவாரி செய்தால்... உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க தொடங்கும். யானை என்பது கேது மற்றும் குருவின் அம்சமாக பார்க்கப்படுவதால்.. யானையின் ஆசீர்வாதத்தை பெறுவதும் யானை மீது சவாரி செய்வதும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய சூட்சும பயண குறிப்பாகும்.
எம்மில் பலருக்கு பிள்ளைகள் பிறந்தவுடன் அந்த பிள்ளையை ஒரு முறையாவது யானை மீது ஏறி சவாரி செய்ய வேண்டும் என முன்னோர்கள் குறிப்பிடுவார்கள்.
அந்த பிள்ளை யானை மீது ஏறி சவாரி செய்த பிறகு அதனுடைய அதிர்ஷ்டம் இயங்கத் தொடங்கும். பிள்ளைகளாக இருந்த தருணத்தில் யானை சவாரி செய்யவில்லை என்றால்.. எந்த வயதிலும், வாய்ப்பு கிடைக்கும் போது யானை மீது சவாரி மேற்கொண்டால் அதிர்ஷ்டம் செயல்பட தொடங்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM