எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தில் அனைத்து மீனவர்களும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகு அரசுடைமையாக்கப்பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து படகுகளையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அந்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை கைதிகளாக தண்டனை அனுபவித்து வருவதோடு, 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
தங்கச்சி மடத்தில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM